-

26 ஜன., 2026

சீவீகே வெளியே ; மறவன்புலோ

www.pungudutivuswiss.com


தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனையும் சிவஞானத்தையும் நீக்குக என அழைப்பு விடுத்துள்ளார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.

1961 பங்குனி  யாழ்ப்பாணத்தில் நடந்த அறப்போருக்காக தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டேன்.

1961 சித்திரை  யாழ்ப்பாணம் கச்சேரி முன் அறப்போர். மல்லாகம் நடராஜா அவர்கள் நடத்திய அஞ்சலகத்தில் தொண்டனாகப் பணிபுரி பணிபுரிய வாய்ப்பு.

தமிழரசுக் கட்சியோடு அன்று தொடங்கிய தொடர்புகள் இன்று வரை இடையீடு இன்றி தொய்வின்றி தளர்வின்றி தொடர்கின்றன.

65 ஆண்டுகள் நான் தமிழரசு கட்சியின் தொண்டன். 1977க்குப் பின் வாழ்நாள் உறுப்பினர். நடுவண் குழு உறுப்பினர். அரசியல் குழு உறுப்பினர். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர். 

கட்சியைக் கண்ணை இமை போல் காத்து வந்த கடமை வீரர்கள் நடுவே நான் களங்கமின்றி வாழ்ந்தேன்.

தந்தை செல்வா என்னை அரவணைத்தவர்.  அமிர்தலிங்கம் என்னை இணைத்து அணைத்துப் போற்றியவர். தொண்டனாக இருந்தேன். பதவிகளைக் கேட்கவில்லை. பொறுப்புகளைக் கேட்கவில்லை. எனினும் பதவி வழி செய்ய முடியாத பொறுப்பு வழி செய்ய முடியாத பல பணிகளைக் கட்சிக்காக நான் 65 ஆண்டு காலமாக ஆற்றி வருகிறேன். 

அயோக்கியத்தனமாக நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காலப் படுகொலைகளுக்கு நான் துணை போகவில்லை.

மதமாற்றிச் சபையான international fellowship of evangelical students அமைப்பில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களைப் பெற்று இலங்கையிலும் தெற்காசியாவிலும் மதமாற்றப் பணிகளில் நான் ஈடுபடவில்லை.

மெதடித்த திருச்சபையின் இணை ஆயராகப் பதவியேற்ற பின்பு பாதிரியாகவே நான் தொடர்ந்து மதமாற்றத்திற்காக 52க்கும் அதிகமான தொண்டர்கள் வைக்கும் பணியில் நான் எப்பொழுதும் ஈடுபடவில்லை

கனடாவில் இருந்து வந்த தொகைகளை ஏமாற்றிக் கையகப்படுத்தவில்லை. அதற்காகக் குதாசனோடு நான் முரண்படவில்லை.

மதமாற்றச் சபைகள் வழி என்னைத்  தோற்கடித்தார் என மாவை சேணாதிராசா என்னைக் குற்றச்சாட்டவில்லை.

சயந்தனை அனுப்பி நான் அருந்தவபாலனை ஓரம் கட்டவில்லை.

பொது வேட்பாளரான என்பதற்காக அரியநேந்திரனை நான் வெளியேற்றவில்லை.

கருத்து ஒன்றை ஊடகத்தில் தெரிவித்ததற்காக மன்னார் சிவகரனை அகற்றவில்லை.

ஊழல்வாதி இரவிகரனுக்காக நான் சிவமோகனைக் கலைக்கவில்லை.

முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த விக்னேசுவரனை அடக்க முடக்க இரணிலோடு நான் கூட்டுச் சேரவில்லை.

தேசத்தின் நலனைக் கருத்தாக கூறிய அனந்தி சசிதரனை நான் வெளியேற்றவில்லை.

சிறையில் வாடும் தமிழ் இளைஞரை விடுவிப்பதே வாழ்வாகக் கொண்ட தவராசாவை நான் விரட்டவில்லை.

உதயன் நாளிதழ் சரணவபவனை நான் கலைக்கவில்லை.

சசிகலா இரவிராசருக்கு மாறாகத் துரும்பைக் கூட நான் எடுக்கவில்லை.


சுரேஸ் பிரேமசந்திரன், சித்தார்த்தன், அடைக்கலநாதன் குழுக்கள் தமிழர் கட்சியோடு இணைந்து போவதை முறித்துக் கூட்டமைப்பை உடைக்கவில்லை.


மாவை சேனாதிராசாவை அறுவான் என ஒரு பொழுதும் நினைக்கேன், நினைத்தால் அன்றோ அச்சொல் வாயில் வரும். 

அல்பிரட் துரையப்பாவோடு கூட்டு வைத்த அயோக்கியன் நான் அல்லன்.

முழங்காலின் கீழ் சூடு வாங்கிய அயோக்கியன் நான் அல்லன்.

கூட்டுறவு ஊழலில் விடுதலைப் புலிகள் சிறையில் அடைத்த அயோக்கியன் நான் அல்லன்.

கூட்டுறவுக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி கொள்ளையடித்த அயோக்கியன் நான் அல்லன்.


தேசத்தை தேசியத்தை தேசியத்தைக் காக்க எழுந்த மாவீரர்களை காட்டிக் கொடுத்தேன் எனச் சுண்டு விரலாலும் சுட்ட முடியாத களங்கமற்ற 65 ஆண்டுகாலத் தமிழரசு கட்சியின் தொண்டன் நான்.


தமிழரசு கட்சியை மதமாற்றுச் சபையாக்கி தமிழினத்தை ஆபிரகாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் சுமந்திரனையும் அயோக்கிய மனம் கொண்டு அறுவான் என அழைக்கும் சிவஞானத்தையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கத் தமிழரசு கட்சியினரை அழைக்கிறேன் என மறவன்புலோ சச்சிதானந்தன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அழைப்புவிடுத்துள்ளார்.

ad

ad