அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இதில் கலந்து கொள்கிறார். இதற்காக டொனால்டு டிரம்ப், தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.
இந்த விமானம் புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பியது. விமானம் திடீரென திரும்பி வந்ததால், அதிபர் டிரம்பின் பாதுகாப்பு வாகனத் தொடரணி அவசர அவசரமாக வாஷிங்டனுக்கு அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்தை நோக்கி விரைந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
அமெரிக்க விமானப்படை தளத்தில் ஏர்போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியதும், மாற்று விமானத்தில் டிரம்ப் உடனடியாக சுவிசுக்குப் புறப்பட்டு சென்றார்.
டிரம்ப் பயணித்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சிறிய அளவில் மின்சார (எலக்ட்ரிக்கல்) கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.