-

21 ஜன., 2026

சுமந்திரன் வீட்டில் சங்கு கூட்டணி செய்த ரகசிய டீல்: வெளியே தெரியாத விடயம்!

www.pungudutivuswiss.com
தமிழரசுக்கட்சி பதில் செயலாளர் MA சுமந்திரன், பதில் தலைவர் CVK சிவஞானம், EPRLF தலைவர் சுரேஷ்பிரமச்சந்திரன், TELO தலைவர்
செல்வம், PLOTE தலைவர் சித்தாத்தன், கிளிநொச்சி EPDP சந்திரகுமார் ஆகியோர் சுமந்திரனுடைய யாழ்ப்பாண வீட்டில் அறையில் கடந்த கிழமை கூடி ஒரு இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர் என சந்திப்பில் பங்குபற்றிய ஒருவர் தெரிவித்தார்.

அப்படி என்னதான் இணக்கப்பாடு இவர்களுக்குள் நடந்தது? ஏற்கனவே சங்கு கூட்டணியோடு வீட்டு கட்சி பதில் செயலாளர், பதில் தலைவர் பேசினவர்கள்தானே இது என்ன இப்போ நடந்தது என யோசிக்கிறீர்களா?

இறுதியாக கடந்த கிழமை நடந்த ஐந்துபேர் சந்திப்பில் இணக்கம் கண்டவிடயம்

(1) மாகாணசபை தேர்தலை பழைய முறையில் விகிதாசாரத்தேர்தலில் நடத்தவேண்டும் எனவும் சகல சிங்கள, தமிழ், முஷ்லிம், மலையக கட்சிகளின் தலைவர் பிரமுகர்களுடன் நேரடியாக கலந்துரையாடி அழுத்தம் கொடுப்பது எனவும்,

(2) அப்படி மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் தமிழரசுக்கட்சி மூலமாக வீட்டுச்சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்வது எனவும்.

(3) வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனை நிறுத்துவதற்கு தாம் ஆட்சேபனை இல்லை எனவும்

(4) ஆனால் ஏனைய நான்கு அமைச்சர்களில் தமது ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் உள்ள EPRLF கட்சிக்கு ஒரு அமைச்சர், TELO கட்சிக்கு ஒரு அமைச்சர், PLOTE கட்சிக்கு ஒரு அமைச்சரும் வழங்குவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதிக்கவேண்டும், ஏனைய சந்திரகுமாருக்கு அவைத்தலைவர் அல்லது பிரதி அவைத்தலைவர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும்

(5) இதற்கு பதில் தலைவர் சிவஞானம் குறுக்கிட்டு முதலமைச்சர் சுமந்திரன் என்பதோடு அமைச்சர் பதவியும், அவைத்தலைவர் பதவியும் தமிழரசுகட்சிக்கு வழங்கினால்தான் மற்றவர்களை சமாளிக்கலாம் என்றபோது, சுமந்திரன் குறுக்கிட்டு தமிழரசுக்கட்சிக்கு எப்படி பதவி வழங்குவது என்பதை பிறகு பேசலாம்.

இன்றைய சந்திப்பில் ஒரு முடிவை ஏகமனதாக எடுப்போம் அதாவது சங்கு கூட்டணி உங்களுக்கு மூன்று அமைச்சர், தமிழரசுக்கட்சிக்கு முதலமைச்சர் பதவி என்ற முடிவு இணக்கப்பாடு எட்டியதாக ஒரு உடன்படிக்கையை நமக்குள் இரகசியமாக செய்வோம் என கூறி சுமந்திரனே அந்த இணக்கப்பாட்டை ஏற்றதாக கடிதம் எழுதி நான்கு தலைவர்கள் கையொப்பம் இட்டதாகவும்

இதனை வெளியில் இப்போதைக்கு கதைக்க வேண்டாம் எனவும் கட்டளை இட்டதாகவும் நம்பகமான தகவலாக அறியக்கிடக்கிறது.

(6) கிழக்கு மாகாணசபை தேர்தலில் எப்படி நடந்துகொள்வது என்பதை தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் ஆராயலாம் என்ற முடிவும் எட்டப்பட்டதுடன் கூட்டம் நிறைவடைந்தது.

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த களமிறங்கிய அரியநேந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தனது பதவிக்காக சங்கோடு புதிய உறவை ஆரம்பித்திருக்கிறார் சுமந்திரன்

ad

ad