-

21 மே, 2026

விழிநீர் அஞ்சலி
--------------------------
அமரர் செல்லம் அற்புநாதன் 
மட்டுவில் ./ லியோன். பிரான்ஸ் 
தோற்றம் .17.06.1947...மறைவு  .16.05.2026 

தெற்கே  கடல் தாலாட்டும் தென்மராட்சி தமிழ்மண்ணில் 
தென்னை பனை வான்முட்டும்   தேன் கனிகள் சுவையூட்டும் 
கற்றவரும் காமுறுவர்  கல்விதனில் உச்ச மேவுறுவோர்
காய்ப்பதுவும் மேய்ப்பதூவும்  களனியென காண்பதுவும் 
மற்றவர்மகிழ்வு கோ டு  மட்டுவில் மண் மடியில் ஒரு 
மாண்புறு குடும்பமதில் செல்லம் சேர் 
பெற்றெடுத்த பெரும் பேர் புகழான் அற்புதநாதனவன்
பெரும் வாழ்வு வாழவென்றே வந்தவதரித்தான்  

அங்குதித்த அற்புதநாதவன்அரும் கல்வி கற்று அஙகோரு 
அன்றில் தங்கமாம் லெட்சுமியை அரும்துணை பற்றி 
தங்கமாய் தரணியிலே தான் பெற்றார் நால்வரையே 
தலைநிமிர தான் வளர்த்து  நால்திசையில் பிரான்ஸ் 
சிங்கார சுவிஸ் பிரிட்டன என்று தானும்  கூ ட வந்து 
சிறப்புடனே வாழ்வென சீர்மிகு மருகர்  நாலொடு 
மங்காத பெருவாழ்வு  மலர் பேரர் பதினொன்றும் 
மட்டில்லா மகிழ்ச்சியோடு மடடுவிலான் வாழ்வுமது 

சொத்தான சொகுசாக  சோபித்த எம் வாழ்வில்  சோகமதாய் 
சொல்செய்தி விழ செயலிழந்தோம்  தேடி நின்றோம் 
முத்தான எம் அப்பா முழுமதியே  எம் மூச்சே முடிவா இது 
மூப்பின் விதியென்றார் முடிந்ததா உம  வாழ்வு இனி 
செத்தாலும்  கிடைத்திடா  செல்லம்   பெற்ற பிள்ளை என்றார் 
சேர்ந்தே அணைத்திருந்த செல்வப்பேரர பார் சேவை செய்து 
அத்தனை மருமககள்முகம்  பார் சுற்றம் பார் உற்றம் பார் 
ஆசையாய் அழுகின்ற அவலமதை பாராயோ 

சாவெடுத்து போனதென்று சபையினில்  சொல்லுகின்றார் 
சங்கரனார் பாதமென்று  சான்றோரும் செப்புகின்றார் 
நாவெடுத்து  நாமழுதாலும்  ஞாலத்தில் வரமாடடீராம் 
நல்லவராய் வாழ்ந்த கதை மட்டும் தான் மிஞ்சுடுமாம்  
 பாவெடுத்து பாடி நின்றோம் பரந்தமாண்டி  சேர்ந்திடுக 
பாரினிலே அற்புதாநாதனவன் பாதமதில் நாமெல்லாம் 
பூவெடுத்து  புகழ்ந்துன்னை புண்ணியனே போய் வா என்று
போற்றிநின்றோம் பெருமகனே பெரும்சாந்தி காண்பாயே  

எமது குடும்பத்தலைவனின் இழப்பின் போது எம்மோடு கரம் கோர்த்து தோள் தொட்டுதுதவிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி  நன்றி கூறி விடை  பெறுகின்றோம் 





ad

ad