|
-
23 நவ., 2012
கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிகுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்து |
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை மீண்டும் விரைவில் தொடங்குமாறு மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நெருக்கடிகள் தொடர்பான சர்வதேசக் குழு தனது நீண்ட அறிக்கை ஒன்றில் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளது.
|
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் : கரலியத்த
பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத் தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இன்று சபையில் தெரிவித்தார்
பெண்கள் இராணுவத்திற்கு எந்தடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்?: சிறிதரன் எம்.பிவடக்கில் பெண்கள் இராணுவத்திற்கு எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அதற்காக இந்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ். சிறிதரன், எவ்விதமான வர்த்தமானி அறிவித்தலும் இல்லாமல்
ஆஸி. செல்ல முயற்சித்த 17 இலங்கையர்கள் இந்தோநேசியாவில் கைது
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 17 இலங்கையர் இந்தோநேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமத்தராவின் தென்மேற்கு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்தோநேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்மிளாவின் பாலர் பாடசாலைக்கு தீ வைக்க முயற்சி
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள்
22 நவ., 2012
இலங்கை தொடர்பில் திருப்தியில்லை; நடவடிக்கை எடுக்க அமெ.தயங்காது |
இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
|
|
ஐ.நாவில் நிறைவேறியது மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் |
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
|
கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு
கடந்த 08.11.2012 அன்று சிறீலங்கா அரசின் பயங்கரவாத கொடுங்கரங்களால், பரிசில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பருதி அவர்களின் வித்துடலிற்கு எதிர்வரும் 24.11.2012 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 16.00 மணிவரை DOCK EIFFEL 282 Eurosites, 50 Av President wilson, 93210 La Plaine Saine Denis என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் வீரவணக்கத்தைச் செலுத்தலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
(போக்குவரத்து: Bus 302 Arrêt : Pont Hainguerlot / M° porte de la chapelle – Bus 153 Arrêt : Pont Hainguerlot )
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸ்
தொலைபேசி இல – 01 43 58 11 42
தொலைபேசி இல – 01 43 58 11 42
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)