இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அணி திரளும் ஈ.பி.டி.பியின
-
10 ஜன., 2013
9 ஜன., 2013
கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள்.
TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் மேல் எடுத்தால் வருடம் ரூ. 3,000 உதவித்தொகை
சென்னை: தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
தமிழரசுக் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் பங்கேற்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை கண்ணால் கண்டேன்! பிரான்ஸ் தூதுவர் வாக்குமூலம்
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நான் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சிப் பகுதியில் இருந்து நேற்று கடல்தொழிலுக்குச் சென்ற ஆறு படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாழமுக்கம் வலுவிழந்தது: காற்றுடன் மழை தொடரும்
60 கி.மீ. வேகத்தில் காற்று, கடல் கொந்தளிப்பாக இருக்கும்; மட்டு உறுகாமத்தில் கூடுதல் மழை
இலங்கைக்கு அருகே 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு தென்கிழக்குப் பகுதியாக நகர்ந்து வங்காள விரிகுடாவில் செயலிழந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விநெகும தமிழ் மக்கள் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தும்
தமிழ் மக்களின் வாழ்வை தடுக்க முயல்கிறது தமிழ் கூட்டமைப்பு
வாழ்வின் எழுச்சித் திட்டம் தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். ஆனால் எமது மக்களின் வாழ்வில் எழுச்சி ஏற் படுவதை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது என ஈ. பி. டி. பி. தலைவர் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)