யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பினில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது.இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டினில் கூட்டமைப்பின் சார்பினில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம்இ பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
-
15 ஜூலை, 2013
14 ஜூலை, 2013
இன்று யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரியில் புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நிகழ உள்ளது
தலைவர் .கா.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்
நூல் அறிமுக உரை .ந.தர்மபாலன் முன்னாள் அதிபர் புங்.ம.வி
வாழ்த்துரை பேராசிரியர் வி.சிவசாமி ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன்
முதல் பிரதி பெறுவோர் திரு சிவா நற்குண சங்கர்
நன்றியுரை தர்மகுனசிங்கம் முன்னாள் அதிபர் புங் ம வி
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நிகழ உள்ளது
தலைவர் .கா.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்
நூல் அறிமுக உரை .ந.தர்மபாலன் முன்னாள் அதிபர் புங்.ம.வி
வாழ்த்துரை பேராசிரியர் வி.சிவசாமி ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன்
முதல் பிரதி பெறுவோர் திரு சிவா நற்குண சங்கர்
நன்றியுரை தர்மகுனசிங்கம் முன்னாள் அதிபர் புங் ம வி
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
காணாமல் போனோர் காணோமல் போனவர்களே! புதிய அரசியல்வாதி தயாமாஸ்டர்!!முன்னதாக அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சி குழுமத்தினில் இருந்து அரசியல் நடவடிக்கைகளிற்காக வெளியேறுவதாக அதன் பணிப்பாளர் எஸ்.குகநாதன் அறிவிப்பை விடுத்திருந்தார்.
கனடா கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!- கனடிய பா.உ. ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.
யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013யேர்மனியில் நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இலங்கைத் தலைவர்கள் இருவரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும்! ‘சனல்4’ பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என ‘சனல் 4’ தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு
13 ஜூலை, 2013
தர்மபுரியில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இளவரசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனைக் கணக்கில் வைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கணக்கில் கொண்டும் அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியரே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் 144 தடை அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு: எய்ம்ஸ் டாக்டர் குப்தா
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளவரசனின் உடல் மறுபரிசோதனை செய்யப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுபரிசோதனை செய்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் பரத்வாஜ், கபிர்குமார், குப்தா, மேலோடெபின் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மறுபரிசோதனைக்குப் பின்னர் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது என்று டாக்டர் குப்தா தெரிவித்தார். மறுபரிசோதனை அறிக்கையை சீல் வைத்து உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் துணைத் தூதரகம் தாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்தாகவும், சென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை துணைத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)