-
29 ஆக., 2013
அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது- த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா சாகும்வரை உண்ணாவிரதம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோச்சடையானில் எஸ்.பி.பி பாடிய பாடல்(வீடியோ)!
கோச்சடையான் திரைப்படத்தின் ரிலீஸுக்கான கடைசி கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. கோச்சடையான் திரைப்படத்தின் எந்த ஒரு தகவலும் எந்த விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது கோச்சடையான் டீம்.
ஆனாலும் ரசிகர்களை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதால் அவ்வப்போது கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு வீடியோ க்ளிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதோடு, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவருகின்றனர். கடைசியாக கோச்சடையான் டீம் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸிங் செய்யும் வீடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 25. தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற முழக்கத்துடன் வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடுகிறார்கள் தே.மு.தி.க.தொண்டர்கள். அன்றைய நாளில், ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை விஜயகாந்த் தொடங்கி அவரது கட்சி நிர்வாகிகள் வரை செய்து மகிழ்கிறார்கள்
28 ஆக., 2013
பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்! முள்ளிவாய்க்கால், கேப்பாப்பிலவு, புதுமாத்தளன் மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி
காணாமல்போனோர் விவகாரம் உட்பட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். பாதிக்கப்பட்ட உங்களது ஆதங்கங்கள் எனக்கு புரிகின்றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால்,
ஜிம்பாப்வே சாதனை : பாகிஸ்தானை வென்றது
ஜிம்பாப்வே அணி கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக பாகிஸ்தானை வென்று சாதனை படைத்து ள்ளது, செவ்வாய்க்கிழமை இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஜிம்பாப்வே இந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளது.
பிரபலமான தமிழீழப் பாடகன் எஸ்.ஜி.சாந்தன் ஆயுத அடக்குமுறையில் இருந்து விடுபடுகிறாரா.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கீதத்தினை பாடி புரட்சி செய்துள்ளார்
தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!…
தன்மானத் தமிழா நீ!
தலை நிமிர்ந்து வாடா!!
இந்த மண்மீது அரசாள!
உனக்கென்ன தடையா!!
பாராளுமன்றத்திலும்!
ஒளிக்கின்றவன்!!
இவன் பரம்பரையே வீட்டுக்கு
வாக்களிப்பவர்!!
(தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்).
தன்மானத் தமிழா நீ!
தலை நிமிர்ந்து வாடா!!
இந்த மண்மீது அரசாள!
உனக்கென்ன தடையா!!
பாராளுமன்றத்திலும்!
ஒளிக்கின்றவன்!!
இவன் பரம்பரையே வீட்டுக்கு
வாக்களிப்பவர்!!
(தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்).
(இப்பாடலின் வீடியோப் பதிவை “அதிரடி” இணையத்துக்காக கூட்டமைப்பின் இளைஞர் அணியுடன் இணைந்து உருவாக்கியவர் வவுனியா “ஜெயம் கொண்டான்”)
பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன்.
பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன்.
பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன்.f
பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன்.
பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன்.
பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன்.f
யாழில் அங்கஜனின் தந்தை கொலைவெறித் தாண்டவம்!: சக வேட்பாளரின் ஆதவாளர்கள் மீது துப்பாகிச் சூடு
யாழ்.குடா நாட்டில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் முறுகல் நிலை முற்றியதில், வடக்கின் மேர்வின் சில்வா என வர்ணிக்கப்படும் அங்கஜனின் தந்தை இராமநாதன், சக வேட்பாளரின் ஆதரவாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்தக் கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர்
27 ஆக., 2013
வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோதராதலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்கேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிகாந்தா, வீ.ஆனந்தசங்கரி, ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.
பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)