இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது இருபது-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இருபது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள்
கொண்ட தொடரில் மோதுகின்றன.
டுபாயில் இடம்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை