தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணையை மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வருவதால் தம் மீதான வருமானவரி வழக்கை 4 மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடையவர் மதுரையில் வெட்டி படுகொலை! தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, மதுரை அழகர்கோயிலில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் அருகே உள்ள கரட்டுஅழகன்பட்டியை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் மாவட்ட பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலையில் முத்துபாண்டிக்கு தொடர்பு
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் எளிமையாக நடத்திய “பூவரசம் பொழுது 2013″ ஒளித்தட்டு வெளியீட்டு வைபவம் (Photos)
ஊரிலே நடைபெறும் வருடாந்த ஆலய மகோற்சவத்தில் இடம் பெறும் தேரோட்டத் திருவிழாவின்போது, ஊரின் நான்கு புறமும் வலம் வரும் கண்கவர் தேரினை ஆர்வமும் பக்தி சிரத்தையும் கொண்ட ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து
மல்வத்த பீட மகாநாயக்கரிடம் அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு
சர்வதேச விசாரணைகள் சுயாதீனமாக அமையாது. எனவே அவ்விசாரணைக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க மல்வத்த பீட மகாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானம் குறித்து கண்டி மல்வத்த மகா நாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல அவர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு
தமிழ், சிங்கள புதுவருட சம்பிரதாய நிகழ்வு தங்கல்லையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலமான கால்டன் இல்லத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பாற்சோறு ஊட்டுவதையும் ஜனாதிபதியின் புதல்வர்கள், உறவினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
யாழ்ப்பாண ஊடகவியலாளர் தாக்கப்படதற்குக் கண்டனம்
யாழ்ப்பாணத்தின் வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் (வயது 29) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் பருத்தித்துறை சென்று கொண்டு இருந்த இவரின்
சோனியா காந்தி வருகையால் இலங்கை அகதிகள் வெளியில் செல்லத் தடை
சோனியா காந்தியின் தமிழ்நாட்டு வருகையை முன்னிட்டு பெருமாள்புர முகாமில் உள்ள இலங்கை அகதிகளை 2 நாட்களுக்கு வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா கா
இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மிருகங்களை விட மிக மோசமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கும் 9 ஈழத்தமிழ் உறவுகள், தம்மை விடுதலை செய்து குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி
திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது; தொடரும் அலட்சியம்! திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று மீண்டும் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான்.
முக சீரமைப்பு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அதனை வவுனியா வைத்தியசாலையில் பெறமுடியும் என வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் மல்லவராட்சி தெரிவித்தார்.
வட பகுதியில் உள்ள முக சீரமைப்பு மற்றும் உதடு அண்ணப்பிளவு தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் இது வரை காலமும் அனுராதபுரம் அல்லது தென் பகுதி வைத்தியசாலைகளுக்கு சென்றே சிகிச்சைகளை பெற்று வந்தனர்.
அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கு இடையில் இலங்கை விடயம் தொடர்பில் கருத்து பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பிஸ்வால் கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழக 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வும், உதயன் குழுமத்தின் ஆதரவுடன் இன்று பி.ப 3 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது.
நூற்றுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் உண்டதாக பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரால் தேடப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் உட்படப் பத்துப் பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவர்களுடன் சேர்த்து இதுவரையில்