தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, மதுரை அழகர்கோயிலில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் அருகே உள்ள கரட்டுஅழகன்பட்டியை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் மாவட்ட பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலையில் முத்துபாண்டிக்கு தொடர்பு
இருப்பதாக கூறி காவல்துறையினர் செய்துள்ள வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே, அதே ஊரை சேர்ந்த நடராஜன், சுப்புகாளை ஆகியோருடன் முத்துபாண்டிக்கு முன்விரோதம் இருந்துள்ளது. நான்கு முறை நடராஜன் கும்பல் நடத்திய தாக்குதலி்ல் முத்துபாண்டி தப்பினார். ஒருமுறை நீதிமன்ற வளாகத்தில் நடராஜன் கும்பல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முத்துபாண்டி உயிர் தப்பினார்.
இந்நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி முத்துபாண்டி, தனது மைத்துனர் தாமரைச்செல்வம் மற்றும் கூட்டாளிகள் கண்மணி, மகுடீஸ்வரன் ஆகியோருடன் நேற்று மாலை மதுரை அழகர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இரவு அங்கேயே அவர்கள் தங்கினர். அதிகாலை 5 மணி்க்கு முத்துபாண்டி கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த நடராஜன் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் முத்துபாண்டியை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அப்பன் திருப்பதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். மேலும், முத்துபாண்டி கூட்டாளி மகுடீஸ்வரனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகர் கோயில் வாசலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழகர் கோயில் வாசலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.