கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ஒரு ரூபாவால் அதிகரித்துள்ள போதிலும் பாணின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.அச்சுவேலி முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நபரை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.