புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014

தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்; இலங்கையிடம் கோருகிறது பிரிட்டன் 
இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான
நடவடிக்கை எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள பிரிட்டன், இலங்கை அரசு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டன் தூதரக அரசியல்துறைப் பொறுப்பாளர் டானியல் பெயின்ரர், "மனித உரிமை மேம்பாடு, நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்த என்பவற்றுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவளிக்கும்.
சுபீட்சமான இலங்கையைக் கட்டியயழுப்புவதே எமது பிரதான நோக்கம். கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கையின் வடபகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை நிறுவப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதே.

வடபகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் அங்குள்ள மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசு காத்தரமான நடவடிக்கை எததையும் எடுக்கவில்லை என்பது புரிகின்றது'' என்று தெரிவித்துள்ளார்.
டானியல் பெயின்ரர் கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு மொழி உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்ததுடன், பொதுமக்களிடமும் கலந்துரையாடினார். அதன்போது தமிழ் மொழி அரச கருமங்களில் புறக்கணிக்கப்படுவது தொடர்பிலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அவரிடம் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெளிவாக எடுத்துரைத்திருந்தனர்.

ad

ad