முத்துஹெட்டிகமவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படவில்லை
பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் பிடியாணை இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.