உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சதமடிக்கப் போவதாக தனது தந்தையிடம் சபதமிட்டு, அதனை நிறைவேற்றிக் காட்டியதாக ரோகித் சர்மாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா உலகக் கோப்பை லீக் போட்டிகளில் பெரியதாக ஜொலிக்கவில்லை. 6 லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்களுடன் மொத்தமே 159 ரன்களே எடுத்திருந்தார். ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 137 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.