புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

அவுஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. 213 ஓட்டங்களில் சுருண்டது பாகிஸ்தான் (வீடியோ இணைப்பு)


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து
விக்கெட்டையும் இழந்து 213 ஓட்டங்களை குவித்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சர்ப்ராஸ் மற்றும் ஷேசாத் ஆகியோர் களமிறங்கினர். சர்ப்ராஸ் (10) ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் ஸ்டார்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஷேசாத் (5) ஹசில்வுட் பந்துவீச்சில் நடையை கட்டினார். அடுத்து ஜோடி சேர்ந்த ஹாரிஸ் சொகைல், அணித்தலைவர் மிஸ்பா நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
பாகிஸ்தான் அணி 97 ஓட்டங்களை குவித்த போது மிஸ்பா (34) ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாரிஸ் சொகைல் (41) ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தார்.
4 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு உமர் அக்மல் (20) ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
சோகிப் மக்சூட் (29), அப்ரிடி (23), வஹாப் ரியாஸ் (16), சோகைல் கான் (4) என வரிசையாக நடையை கட்டினர். ஈசன் அடில், ரஹட் அலி இருவரும் போராடி அணியை 200 ஓட்டங்கள் பெற வைத்தனர்.
ஈசன் அடில் (15) பல்க்னர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரஹட் அலி (6) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவுஸ்திரேலியா சார்பில், ஹசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும், ஜான்சன், பல்க்னர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ad

ad