யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் செவ்வாய்க்கிழமை (23) காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். |