-

24 டிச., 2025

சிறிதரன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்! [Wednesday 2025-12-24 18:00]

www.pungudutivuswiss.co

இராணுவ அதிகாரியொருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த சிறிதரனின் செயற்பாடு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வாறு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்திய தீர்மானத்தை சிறிதரன் ஏதேனுமொரு வழியில் திருத்தியமைக்க வேண்டும் எனவும், அன்றேல் தாம் அவருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

அச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் புதன்கிழமை (24) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் கொழும்பு இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு அரசியலமைப்புப்பேரவையில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவஞானம் சிறிதரன் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்டகால வெற்றிடம் நிலவிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தற்போது சேவையில் உள்ள இராணுவ அதிகாரியான கேர்ணல் ஓ.ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை அண்மையில் அரசியலமைப்புப்பேரவையில் ஐந்துக்கு நான்கு என்ற வாக்கு விகிதாசாரத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தோரில் அரசியலமைப்புப்பேரவையில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனும் உள்ளடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றிக் கருத்துரைத்த கஜேந்திரகுமார், சிறிதரனின் இச்செயற்பாடு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் அதேவேளை, அதனைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் சிறிதரன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும், ஆதரவாக வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்திய தீர்மானத்தை ஏதேனுமொரு வகையில் திருத்தியமைக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் சிறிதரனை தாமே அரசியலமைப்புப்பேரவைக்கு முன்மொழிந்ததாகக் குறிப்பிட்ட அவர், மேற்படி தீர்மானத்தை மாற்றியமைப்பதற்கு சிறிதரன் தவறும் பட்சத்தில், தாம் அவருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறவேண்டியிருக்கும் என எச்சரித்தார்.

   Bookmark and Share Seithy.com

ad

ad