புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

பூரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி மரணம்!




பூரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி மரணம் அடைந்ததை தொடர்ந்து, அக்கோவிலின் 800
ஆண்டு கால பழமையான தேவதாசி முறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ளது புகழ்பெற்ற பூரி ஜெகன்நாத் கோவில். இந்த கோவிலில், சஷிமாணி தேவி என்ற பெண், கடவுளின் மனித துணைவியாகவும், அந்த கோவிலின் ஒரே பெண் பணியாளரகவும் இருந்து வந்தார். இவர், 68 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலில் தேவதாசியாக பணியாற்ற தொடங்கினார். இவரின் முக்கிய பணி கோவிலின் விஷேச நாட்களில் கடவுள் முன் நடனம் ஆடுவது மற்றும் கீதையை பாடலாக பாடுவது.

7 ஆண்டுகளுக்கு முன்பே உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனது பணியைவிட்டு விட்டு சஷிமாணி தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், 92 வயதான சஷிமாணி தேவியின் உடல்நிலை கடந்த சில மாதங்களாகவே மோசமடைந்து வந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார்.

12 ஆம் நூற்றாண்டில் உருவான பழமையான பூரி ஜெகன்நாத் கோவிலின் தேவதாசி நடைமுறை, சஷிமணி தேவி மரணத்துடன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ad

ad