வடக்கில் நிலைத்திருக்கும் இராணுவத்தினரை அகற்றுவீர்களா? இல்லையா என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
வானொலி செய்தி சேவை ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தை அகற்றுவது தொடர்பாக ஸ்தீரனமான முடிவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்க வேண்டுமென அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் வடக்கில் உள்ள இராணுவத்தை அகற்றுவதில்லை என வணக்கத்திற்குரிய மதகுருமார்களிடம் அறிவித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் என்னிடம் அவர் இவ்வாறானதொரு கருத்தை கூறவில்லை.
இது தொடர்பாக தெளிவான பதில் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்க வேண்டும் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.