புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

ரயில் தடம் புரண்டு விபத்து: 15 பயணிகள் பலி; 50 பேர் காயம்!



உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே, பச்ராவன் என்ற இடத்தில் இன்று அதிகாலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில், திடீரென தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ரயிலின் 3 பெட்டிகள், தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது. இதில், 6 பயணிகள் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது என டிவிஷனல் கமிஷனர் மகேஷ் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும்  50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே மீட்பு படையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்த தகவலறிந்ததும் அக்கம் பக்கத்திலுள்ள கிராம மக்களும் விரைந்து வந்து மீட்புக் குழுவினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

சிக்னலுக்காக ரயிலை டிரைவர் நிறுத்த முயன்றபோது, பிரேக் பிடிக்காமல் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ரேபரேலி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. இதனால் லக்னோ - வாரணாசி இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 2 லட்சம் நிவாரண நிதி
இதனிடையே இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காயமடைந்தோருக்கு ரூ. 50,000, இலேசான காயமடைந்தோருக்கு ரூ. 20,000 மும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad