புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2024

www.pungudutivuswiss.comசனநாயக தமிழரசு கூட்டமைப்பு சின்னம் மாம்பழத்துக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ஒரு ஆய்வு அலசல் அங்கம் மூன்று __________________________
இனி தமிழ் தேசியக் கட்சிகள் என்ற வரிசையில் அங்கம் வைக்கும் கட்சிகளைப் பற்றி ஆராய்வோம் முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னணி பற்றி பார்ப்போம் முதல் தமிழ் கட்சியான காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பில் இணைந்த பின் மௌனித்திருந்தது விடுதலைப்புலிகள் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கிய போது அங்கே இவர்களுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டது முக்கியமாக திருமதி சிதம்பர நாதன் கஜேந்திரகுமார் கஜேந்திரன் ஆகியோருக்கு அந்த உறுப்பினர் பதவிகள் கிடைத்தன இங்கே குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ரீதியில் கையேந்திர குமாருக்கும் பல்கலைக்கழகத்தில் இருந்து பொங்கு தமிழ் ஆரம்பித்த ஒரு புரட்சி மாணவன் என்ற ரீதியில் புலிகளின் சிபாரிசில் கஜேந்திரனுக்கு இடம் கிடைத்தது போராட்டம் மௌனித்த பின்னர் கஜேந்திர குமார் அணிக்கு கிடைத்த ஆசனங்கள் போதாது என்ற ரீதியில் கூட்டமைப்பிலிருந்து முதன் முதலில் வெளியேறி தனித்து நின்று போட்டியிட்டவர்கள் இவர்கள் அன்று முதல் புலிகளுக்கு சொந்தக்காரர்கள் என்றும் மற்ற தமிழ் கட்சிகள் எல்லாம் துரோகிகள் என்றும் தாங்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு விலை போகாத கட்சி என்றும் பிரச்சாரத்தை தொடங்கினார்கள் தமிழீழம் பெற்றுத் தருவோம் என்று தொடங்கியவர்கள் இப்போது சமஸ்டியில் வந்திருக்கிறார்கள் ஏனைய முக்கிய தமிழ் கட்சிகளும் இதே சமஸ்டியை தான் வலியுறுத்துகின்றன மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் தனி நாடு என்றும் ஒரு நாடு இரு தேசம் கொள்கை என்றும் மக்களை ஏமாற்றுகின்ற வித்தையை கொண்டுள்ளவர்கள் ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கே சென்று ஒரு நாடு என்ற கொள்ளைக்கு கீழ் சத்திய பிரமாணம் செய்வார்கள் அந்த அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்து சத்தியம் செய்வார்கள் அவர்களின் தனிநாட்டுக் கொள்கைக்கு இந்த சத்திய பிரமாணம் எதிரானது முக்கியமான கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் இலங்கையில் முதல் 10 பணக்காரர்கள் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வந்து தமிழ் தமிழர் என்று கோஷமிடும் இவர் கொழும்பில் சிங்கள வங்கியில் தனது பங்கை வாங்கி வைத்திருக்கும் ஒரு முதலாளி அதாவது சிங்கள தேசத்தில் தனது முழு சொத்தையும் முதலீடு செய்துள்ள ஒரு துரோகி முதலீடு செய்யும் ஒரு முதலாளி என்றால் தமிழருக்கு உதவுவதாக அல்லது தமிழ் பிரதேசங்கள் இருப்பதான நிறுவனங்கள் அல்லது தமிழர்களின் உணர்வாழ்வை தமிழரின் வேலை வாய்ப்பை கொடுக்கக் கூடிய தமிழ் பிரதேசங்களில் முதலீடு செய்து இருக்கலாம் உண்மையான தமிழ் உணர்வு உள்ளவராக இருந்திருந்தால் இது முதல் அடி தேர்தல் முடிய வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுலா வந்து கொண்டிருப்பவர் கடைசியாக தொடர்ந்து ஆறு மாதங்கள் பாராளுமன்றத்துக்கு லீவு கேட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது கஜேந்திரன் மட்டும் என்ன செய்வார் தனியாக எங்காவது சிறு சிறு போராட்டங்களை மறியல்களை செய்து கொண்டு கட்சியை இழுத்துச் செல்கிறார் இவர்கள் மூன்று தடவை என்பியாக பாராளுமன்ற சென்றார்கள் தமிழ் மக்களுக்காக இதுவுமே செய்யவில்லை இவர்களின் கோஷத்தின் படி கொள்கையின்படி அதற்காக எங்கே என்ன செய்தார்கள் இந்த முன்னேற்றம் கொடுத்தார்கள் இவர்கள் கேட்கும் தீர்வுக்கு அல்லது கொள்கைக்கு சார்பாக இதனை பெற்றுள்ளார்கள் இப்பொழுதும் இனித்தான் பிறப்புகிறோம் இனி தான் கேட்கப் போறோம் இனி தான் கண்டுபிடிக்க போகிறோம் என்று போலி கோஷங்களை சொல்லிக் கொண்டு இருப்பவர் இவர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு மறைமுகமாகவும் நேரடியாகவும் பண உதவி செய்து கொண்டிருக்கிறது நேரடியாக புனர்வாழ்வு வாழ்வாதாரம் என்ற ரீதியில் பினாமி பெயர்களில் பணத்தினை பெற்று மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த உதவியை வைத்து தேர்தல் வரும் போது வாக்கு கேட்க செல்கிறார்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் இவர்கள் அங்குள்ள புலிகளின் அலுவலகங்களுக்கு புலிகளின் உள்ளக கூட்டங்களில் பங்கு பற்றி அவர்களின் மண்டையை கழுவி நிதியினை கேட்டு வருகிறார்கள் புலிகளும் உணர்ச்சிவசமான அரசியலுக்கு ஆசைப்பட்டு இவர்களிடம் அவிந்து விடுகிறார்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிய தமிழ் கட்சிகள் பிளவு பட்டிருப்பது நாள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் ஆட்சி அமைக்க தேவையான வாக்குகளுக்கு தமிழரசு கட்சி காத்திருக்கும் உங்களை அவர்கள் காலை வாரிவிட்டு பிரபலமான தமிழ் துரோக கட்சியான இபி டி பி க்கு ஆட்சி போகும் வகையில் வாக்களிக்கிறார்கள் இவர்கள் எப்படி தமிழ் தேசியக் கட்சி என மக்கள் அங்கீகரிக்க முடியும் தமிழரசு கட்சியை எதிர்க்க வேண்டும் தமிழரசு கட்சியை விடக்கூடாது தமிழரசு கட்சி சபைகளில் ஆட்சி அமைக்க கூடாது என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள் அதற்காக அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இ பி டி பி கட்சிக்கும் டக்ளசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்களிப்பில் துணை நின்றவர்கள் வேலணை யாழ்ப்பாணம் நல்லூர் சாவகச்சேரி போன்ற இடங்களில் இவர்களது கைவரிசையில் இபிடிபி ஆட்சி அமைத்த வரலாறு உண்டு இவர்களை தமிழ் தேசிய கட்சி என்று மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் தேர்தலுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் தலை காட்டுவார் தவிந்த நேரங்களில் கொழும்பிலும் வெளிநாடுகளும் உல்லாசமாக வாழ்ந்து திரிபவர் மக்களோடு மக்களாக வாழ்பவரோ மக்களின் குறைகளை வடக்கு கிழக்கு சென்று கவனிப்பாரோ கேட்டுத் தெரிந்து கொள்பவரோ தீர்வு காண்பவரே அல்ல இதனை விட இவர்கள் பிரதேச வாதத்தை விதைப்பவர்கள் முக்கியமாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்க அதனை உண்மையான வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் இனத்தை நேசிப்பவர்களாக இருந்தால் கிழக்குக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் விஷயம் என்னவென்றால் கையேந்திரனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக பிரிந்து சென்றவர்கள் கையேந்திரன் தோல்வி கண்டபோது அவருக்கு எம் பி பதவி கொடுத்து சமாளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்த இடத்தினை கயேந்திரனுக்கு கொடுத்திருந்தார் இதே நிலையில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை தமிழரசு கட்சி அம்பாறைக்கு ஒரு தமிழ் பிரதிநிதி வேண்டும் என்ற நிலையில் வழங்கி கௌரவித்தார்கள் இந்த இடத்தில் தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு இணைந்த தாயக தேசிய கட்சி என்பதை நிரூபித்திருக்கிறார் முக்கியமாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வி கண்ட நிலையில் அவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் உண்மையில் மாவை அந்த இடத்தை தியாகம் செய்து அம்பாறைக்கு விட்டுக் கொடுத்தார் மாவை சேனாதி இரண்டாவது தியாகம் இது முதலில் கொழும்பில் இருந்து வந்த விக்னேஸ்வரனை மாகாண முதல்வராக ஆக்க எண்ணி அந்த இடத்திலேயே விட்டுக் கொடுத்த ஒரு தியாகி மாவை சேனாதிராசா 

4 நவ., 2024

கருணா கட்சி வேட்பாளர், ஆதரவாளர்களை புரட்டியெடுத்த பிள்ளையான் குழு! [Monday 2024-11-04 05:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா  கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக  பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? [Monday 2024-11-04 05:00]

www.pungudutivuswiss.com


ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்

சேறு பூசுகிறார் சுமந்திரன்- பொலிஸ் நிலையத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் புகார்! [Monday 2024-11-04 05:00]

www.pungudutivuswiss.com


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலதான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலதான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்

27 அக்., 2024

சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாம் வென்று எம் பி ஆனாலும் அவரது பதவி பறிக்கப்படும் சுமந்திரனின் நேரடி வாக்குமூலம்

www.pungudutivuswiss.com
தேர்தல் முடிய செய்ய போவதை தன வாயாலே  ஒத்துக்கொண்டு  சொன்ன வாக்குமூலம் .அரசியல் விமர்சகர்களும் மக்களும் சந்தேகத்துடன் சொல்லி

26 அக்., 2024

அனுரவின் அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி! [Friday 2024-10-25 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

25 அக்., 2024

தமிழரசு கட்சி தனிநபரின் கம்பனியாக மாறிவிட்டது என சட்டத்தரணி கே.வி.தவராசா ஆவேசம்

www.pungudutivuswiss.com
-----------------------------------------------------------------
ஜனநாயக தமிழரச கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை
உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய

சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்த காலம் முதலே பிரச்சினைகள் முளைவிடத் தொடங்கின.

www.pungudutivuswiss.com

தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக செயற்படமாட்டோம்! - அமெரிக்க தூதுவர் உறுதி. Top News [Friday 2024-10-25 05:00]

www.pungudutivuswiss.com

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார்

அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம். Top News [Friday 2024-10-25 05:00]

www.pungudutivuswiss.com

தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்

23 அக்., 2024

www.pungudutivuswiss.com

தமிழ் மக்களே....... சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் இறுக மூடி விடுங்கள்.

www.pungudutivuswiss.com
_________________________:_________________________
மாவை சேனாதிராசாவின் இரண்டு தியாகங்கள் சுமந்திரனுக்கு முன்னே மலையாக எழுந்து நிற்கிறது தமிழரசு கட்சி என்பது தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களின் இதயத்தில் ஊறிப்போன ஒரு கட்சி எமது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பழியை மொட்டு தலைவர்களின் மீது கட்ட முயற்சி! [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன.   
இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

சுவிஸ் தூதரக அதிகாரிகள் செல்வம் அடைக்கலநாதனுடன் சந்திப்பு! [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் தலைமையிலான குழுவினர்  இன்று மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை அவரது அலுவலகத்தில்  சந்தித்து கலந்துரையாடினர்.

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் தலைமையிலான குழுவினர் இன்று மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது! [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது

தேசிய மக்கள் சக்தி அரசுடன் கூட்டுச் சேருவோம்! - ஈபிடிபி கூறுகிறது. [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார்

தமிழ் மக்களே சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் மூடி விடுங்கள் _________________________

www.pungudutivuswiss.com
மாவை சேனாதிராசாவின் இரண்டு தியாகங்கள் சுமந்திரனுக்கு
முன்னே மலையாக எழுந்து நிற்கிறது தமிழரசு கட்சி என்பது
தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களின்

22 அக்., 2024

புதிய கடவுச்சீட்டில் நல்லூர் கந்தன்! [Tuesday 2024-10-22 05:00]

www.pungudutivuswiss.com



நேற்று முதல் கடவுச்சீட்டின் புதிய பதிப்பு பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 6 வது பக்கத்தில் புறஊதா வண்ண ஒளியில்   நல்லூர் கந்தசுவாமி ஆலய முகப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது.  கடவுச்சீட்டுப் பக்கங்களில் தலதா மாளிகை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று முதல் கடவுச்சீட்டின் புதிய பதிப்பு பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 6 வது பக்கத்தில் புறஊதா வண்ண ஒளியில் நல்லூர் கந்தசுவாமி ஆலய முகப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டுப் பக்கங்களில் தலதா மாளிகை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

225 உறுப்பினர்கள் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றம் கூடும்? [Tuesday 2024-10-22 05:00]

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்

நீதிபதிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய ஶ்ரீரங்கா தலைமறைவு! [Tuesday 2024-10-22 05:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ad

ad