புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2025

அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை ஆரம்பம்! [Tuesday 2025-01-21 16:00]

www.pungudutivuswiss.com

பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அனுரகுமார மறந்து விட்டார்! [Tuesday 2025-01-21 16:00]

www.pungudutivuswiss.com

எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் சட்டம் அமுலில் இருக்கும்! [Tuesday 2025-01-21 16:00]

www.pungudutivuswiss.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

சென்னைப் பயணத்தை தடுக்க சுமந்திரன் சூழ்ச்சி?- நாடாளுமன்றில் சிறீதரன் குற்றச்சாட்டு. [Tuesday 2025-01-21 16:00]

www.pungudutivuswiss.com

தனக்கு எதிராக போலியான பிரசாரங்களை பரப்பும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

20 ஜன., 2025

அனுராவின் நேரடி கட்டளையால் கைது: ராணுவம் மன்னார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தம் மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்

www.pungudutivuswiss.com
மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்
சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய ராணுவச் சிப்பாய் கைதாகியுள்ளார்.

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து- விரைவில் சட்டமூலம்! [Monday 2025-01-20 06:00]

www.pungudutivuswiss.com

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் இன்று திணறுகிறார்கள், போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இராணுவ முகாமில் இருந்து 73 துப்பாக்கிகள் மாயம்! [Monday 2025-01-20 06:00]

www.pungudutivuswiss.com

இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்தவுக்கு 4.6 மில்லியன் வாடகை- செலுத்தாவிட்டால் வெளியேற உத்தரவு! [Monday 2025-01-20 06:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நிரம்பி வழியும் குளங்கள் - வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ளக்காடு! [Monday 2025-01-20 06:00]

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் 9 அடிக்கு திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் 9 அடிக்கு திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

18 ஜன., 2025

யாழ். நகரில் வருமான வரி அதிகாரிகள் போல நடித்து 30 இலட்சம் ரூபா கொள்ளை! [Friday 2025-01-17 17:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது

17 ஜன., 2025

யாழில். போலி தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த கனேடியன் பிரஜை கைது

www.pungudutivuswiss.com

போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில்
கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்

பழிவாங்கப்படும் நொச்சிக்குளம் மக்கள் - மன்னார் பொலிசாரே பொறுப்புக்கூற வேண்டும்! [Friday 2025-01-17 05:00]

www.pungudutivuswiss.com

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

16 நாட்களில் 5 பேர் சுட்டுக்கொலை -நாட்டில் என்ன நடக்கிறது? [Friday 2025-01-17 05:00]

www.pungudutivuswiss.com

2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் மன்னாரில்  இடம்பெற்ற சம்பவம் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பாதாள உலக பிரமுகர்களால் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தக் குற்றச் செயல்களை உடனடியாக ஒடுக்கவும்  இந்த நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார்.

வண்டிச் சவாரியில் தொடங்கிய மோதல் - இதுவரை 7 பேர் பலி! [Friday 2025-01-17 05:00]

www.pungudutivuswiss.com

மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

15 ஜன., 2025

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு கடிதம்! [Wednesday 2025-01-15 04:00]

www.pungudutivuswiss.com

25 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

25 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது

கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு! [Wednesday 2025-01-15 04:00]

www.pungudutivuswiss.com

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.

13 ஜன., 2025

பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு

www.pungudutivuswiss.com

எமது பிரச்சினையை பேசாமல் ஸ்டாலினுடன் செல்பி எடுக்கவா சென்றனர்? [Monday 2025-01-13 17:00]

www.pungudutivuswiss.com

இந்தியா - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

இந்தியா - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்

இலங்கையில் 400 றோ உளவாளிகள்! [Monday 2025-01-13 06:00]

www.pungudutivuswiss.com

இந்தியாவின் றோ உளவுப் பிரிவைச்  சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

பிரிந்தவர்களை இணைக்க உள்ளக கலந்துரையாடல்! [Monday 2025-01-13 06:00]

www.pungudutivuswiss.com

பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.  உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

ad

ad