-
7 அக்., 2025
காசா சமாதான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ரஷ்ய ட்ரோன்களில் பிரித்தானிய உதிரி பாகங்கள்: அம்பலப்படுத்திய உக்ரைன் ஜனாதிபதி! [Tuesday 2025-10-07 07:00]
![]() உக்ரைன் மீது ஞாயிறன்று நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன்களில் பிரித்தானியாவின் உதிரி பாகங்கள் காணப்பட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரித்தானிய மைக்ரோ கம்ப்யூட்டர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு உதிரி பாகங்கள் அந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் |
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரையுங்கள்! [Tuesday 2025-10-07 07:00]
![]() தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ்சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். |
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாரில்லை! [Tuesday 2025-10-07 07:00]
![]() ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
அன்னபூரணி அம்மாளின் கப்பல் அமெரிக்கப்பயணம் - 1938
6 அக்., 2025
வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]
![]() இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. |
காணி உறுதி மோசடி- பெண் சட்டத்தரணி கைது! [Monday 2025-10-06 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார் |
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. |
வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]
![]() இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. |
"விஜய் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்" - நக்கீரன் கோபால்! [Sunday 2025-10-05 18:00]
தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என நக்கீரன் கோபால் கூறியுள்ளார். கரூர் துயர சம்பவம் குறித்து பேசிய நக்கீரன் கோபால், 41 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட மரண பலி என்றும், நரபலிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். திருவாரூரில் தவெக கூட்டம் நடந்தபோது அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். ஆனால் தாலுகா அலுவலகத்தை அதன் பாதுகாவலர் நெரிசலின்போது திறந்துவிட்டதால் 500 பேர் உள்ளே போய் தப்பித்ததாக செய்தி. |
அமெரிக்க வீரரின் செயல் சர்ச்சை: குகேஷின் காயை ரசிகர்களை நோக்கி வீசிய ஹிகாரு நகாமுரா Posted by By tamil

இந்திய வீரர் குகேஷுடன் நடந்த செஸ் போட்டியில், அ
சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
குமரப்பா -புலேந்திரன் நினைவுத்தூபியை இடித்தழித்தவர் நகரசபையுடன் முரண்பாடு! [Monday 2025-10-06 07:00]
![]() சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது. அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை |
அத்துடன் அதனை இடித்தழித்த நபர் தூபியை கட்டித் தர முடியாது என்று தற்போது பிரதேச சபையினருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை மரபணுச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்! [Monday 2025-10-06 07:00]
![]() செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது |
ரணிலை விட அனுரவுக்கான ஒதுக்கீடு 72 வீதம் அதிகம்! [Monday 2025-10-06 07:00]
![]() ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். |
ஜெனிவா வரைவில் மீண்டும் இனமோதல்- வாக்கெடுப்பை கோராது இலங்கை! [Sunday 2025-10-05 16:00]
![]() இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. |




.jpg)










