-

6 அக்., 2025

www.pungudutivuswiss.com
◉◉ விசேட செய்தி :பதவி விலகினார் பிரதமர் Sébastien Lecornu!!

 பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மக்ரோனிடம் கையளித்தார்.

 அவரது பதவி விலகல் கடிதத்தை மக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சென்ற செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட அவர், இன்று பதவி விலகியுள்ளார். புதிய பிரதமரை நியமிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“பிரதமராக இருப்பது கடினமான பணி. சூழ்நிலைகள் சரியில்லாதபோது நீங்கள் பிரதமராக முடியாது,"  என Sébastien Lecornu ஊடகங்களிடம் தெரிவித்தார். “நான் பாதை ஒன்றை உருவாக்க முயற்சித்தேன். 49.3 எனும் அரசியலமைப்பை பயன்படுத்தாமல், அனைத்து கட்சிகளையும் இணைத்து வரவுசெலவுத்திட்டத்தை உருவாக்க முயன்றேன். ஆனால் அது நிறைவேறவில்லை. சில பிரச்சனைகளை முடித்து முன்னெடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஐந்தாம் குடியரசில் மிக குறுகிய காலம் பதவி வகித்த பிரதமராக Sébastien Lecornu உள்ளார். 27 நாட்கள் மட்டுமே அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார்

ad

ad