புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2025

கூகுளுக்கு €2.95 பில்லியன் அபராதம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான நடவடிக்கை!

www.pungudutivuswiss.com

ஐரோப்பிய ஒன்றியம் கூகுளுக்கு இணையவிளம்பரத் துறையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக சுமார் 2.95 பில்லியன்

6 செப்., 2025

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு

www.pungudutivuswiss.com

செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள

www.pungudutivuswiss.com
12 மணி நேரத்தில் 4 துப்பாக்கிச் சூடுகள்!
[Saturday 2025-09-06 17:00]


கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

www.pungudutivuswiss.com
239 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்!
[Saturday 2025-09-06 17:00]


சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதிவான்  லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

4 செப்., 2025

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றின் மேல் ஒன்றாக கிடந்த எலும்புக்கூடுகள்!
[Thursday 2025-09-04 10:00]


யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

www.pungudutivuswiss.com
நறுவிலிக்குளத்தில் 906 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது!
[Thursday 2025-09-04 10:00]


மன்னார்- முருங்கன்  நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் 906 கிலோ   கேரள கஞ்சா பொதிகள் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் ,  கடற்படையினருடன் இணைந்து மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமைகாலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தனர்.

மன்னார்- முருங்கன் நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் 906 கிலோ கேரள கஞ்சா பொதிகள் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் , கடற்படையினருடன் இணைந்து மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமைகாலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தனர்.

www.pungudutivuswiss.com
விசாரணைக்கு முன்னிலையாகிறார் சஜித் பிரேமதாச!
[Thursday 2025-09-04 10:00]


எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளார்

www.pungudutivuswiss.com
யாழ். நீதிபதிகள் மூவருக்கு பதவி உயர்வு!
[Thursday 2025-09-04 10:00]


யாழ்ப்பாண நீதிமன்றங்களில் பணியாற்றிய, நீதிபதிகள் மூவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய நீதிபதிகளான A.A. ஆனந்தராஜா , அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் மேல் நீதின்ற  நீதிபதிகளாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளனர்.

யாழ்ப்பாண நீதிமன்றங்களில் பணியாற்றிய, நீதிபதிகள் மூவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய நீதிபதிகளான A.A. ஆனந்தராஜா , அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் மேல் நீதின்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளனர்.

1 செப்., 2025

www.pungudutivuswiss.com
மயிலிட்டியில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் பொலிசாரால் விரட்டியடிப்பு! Top News
[Monday 2025-09-01 16:00]
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.

www.pungudutivuswiss.com

31 ஆக., 2025

www.pungudutivuswiss.com
தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் - இன்றும் 12 அடையாளம்!
[Sunday 2025-08-31 18:00]


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன்  10 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 10 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   
   Bookmark and Share Seithy.com
www.pungudutivuswiss.com
பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியேறியவர் சுட்டுக்கொலை!
[Sunday 2025-08-31 18:00]


வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை  நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காலை 10.30 மணியளவில் வேவா வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த ஒரு குழு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காலை 10.30 மணியளவில் வேவா வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த ஒரு குழு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் காயங்களுடன் தப்பினார்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் நடந்து வரும் மேல் நீதிமன்ற வழக்கு தொடர்பாக கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்துள்ளனர். இறந்தவருக்கு செப்டம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வரவிருந்தது.

வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

30 ஆக., 2025

www.pungudutivuswiss.com
அடுத்த குறி மைத்திரியும் கோட்டாவும்!
[Saturday 2025-08-30 16:00]


முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது

www.pungudutivuswiss.com
விசேட உரை நிகழ்த்தவுள்ள ரணில்!
[Saturday 2025-08-30 16:00]


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.  கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம்!
[Saturday 2025-08-30 16:00]


செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி  தமிழ் தேசிய கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் சனிக்கிழமை (30) நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி தமிழ் தேசிய கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் சனிக்கிழமை (30) நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் இன்று பாரிய பேரணிகள்!
[Saturday 2025-08-30 07:00]


சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் கவனவீர்ப்பு  ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

www.pungudutivuswiss.com
செம்மணியில் இதுவரை 187 எலும்புக்கூடுகள் அடையாளம்- நேற்றும் 10!
[Saturday 2025-08-30 07:00]

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

28 ஆக., 2025

www.pungudutivuswiss.com
ஆளுநர்களின் நிர்வாகத்தை விட அரசியல்வாதிகளின் நிர்வாகம் 100 வீதம் சிறந்தது!
[Thursday 2025-08-28 19:00]


எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும். அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது. தேர்தலை பிற்போடுவதற்காகவே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும். தேர்தலை பிற்போட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் குழுவை சவாலுக்குட்படுத்துவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும். அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது. தேர்தலை பிற்போடுவதற்காகவே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும். தேர்தலை பிற்போட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் குழுவை சவாலுக்குட்படுத்துவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
தம்பிலுவில் மயானத்தில் மீண்டும் அகழ்வு!
[Thursday 2025-08-28 19:00]

கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை  அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட  அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

ad

ad