புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2015

நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்! மஹிந்த தரப்பு எச்சரிக்கை


நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்ம் என ஒரு தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றச் சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு புறம்பான வகையில் எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்தமைக்கு எதிராக, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் பின்னர் யார் எதிர்க்கட்சியில் இருக்கப் போகின்றார்கள் என்பதனை அடையாளம் கண்டு, அவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.
எமது நடவடிக்கைகயை தடுக்க ஆளும் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற குண்டாந்தடியை கையில் எடுக்க முயற்சிக்கின்றன.
இவ்வாறான முயற்சிகளின் மூலம் எமது போராட்டத்தை தடுக்க முடியாது.
தேவை ஏற்பட்டால் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் கடுமையான கலகங்களில் ஈடுபடவும் அஞ்சப் போவதில்லை.
எதிர்வரும் காலங்களில் எமக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கு ஆளும்கட்சி சந்தர்ப்பம் வழங்க வேண்டும். எனினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் எமக்கு பேசுவதற்கு சந்தர்ப்பத்தை மறுக்கக்கூடிய சாத்தியம் உண்டு.
நாடாளுமன்றில் எம்மை ஊமையாக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்

ad

ad