புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2016

தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து வைகோ பாதியில் வெளியேறியது ஏன்...செய்தியாளர் விளக்கம்!

சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான்
எனது கேள்வியாக இருந்தது என்று வைகோவை நேர்காணல் செய்த பத்திரிக்கையாளர் ஏ.எல் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது அவரை நேர்காணல் செய்த பத்திரிக்கையாளர் கண்ணன்.' வைகோ அணியை அதிமுகவின் பி டீம் என்றும் அவர் வாக்குகளை பிரிப்பதற்காக ஜெலலிதாவிடமிருந்து 1500 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதாகவும் வலைதளங்களில் பேசப்படுவதாக குற்றஞ்சாட்டினார். 

இந்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த வைகோ அப்போதே தொலைக்காட்சியின் வயர்லெஸ் போனை கழற்றிவிட்டு அரங்கிலிருந்து விறுவிறுவென வெளியேறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அந்த நேர்ணாலை செய்த பத்திரிக்கையாளர் கண்ணன், இதுகுறித்து தனது முகநுால் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நண்பர்களுக்காக ஒரு விளக்கம் என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள அந்த விளக்கத்தில்,  திரு. வைகோ அவர்களுடன் ஒரு மணி நேர நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது.ஆனால் 15 நிமிடங்களோடு நேர்காணலை நிறைவு செய்ய வேண்டிய நிலை...காரணம் நீங்கள் அறிந்ததுதான்.

எங்களது தொலைக்காட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. அனைத்து தலைவர்களையும் சமமாக மதிக்கிறது. குறிப்பாக திரு. வைகோ அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் மதிக்கின்ற தலைவர்களில் அவரும் ஒருவர். திரு. வைகோ அவர்களை களங்கப்படுத்த வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். எனது கேள்வியை முழுமையாக கேட்பதற்கு முன்னதாகவே அவர் கோபப்பட்டு எழுந்தது துரதிஷ்டவசமானது.
சமூக வலைத்தளங்களையும் பத்திரிகைகளையும் மேற்கோள் காட்டி அவர் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும்போது அதே சமூக வலைத்தளங்களில் திரு வைகோ மீது வந்த குற்றச்சாட்டுக்களை அவரிடம் எடுத்து சொல்லும் நோக்கிலேயே நான் கேள்விகளை முன் வைத்தேன். மதிப்புக்குரிய திரு.வைகோ அவர்கள் பணம் பெற்றுவிட்டதாக நான் குற்றசாட்டை முன் வைக்கவில்லை.சமூக வலைத்தளங்களில் உங்கள் மீதும் ஒரு குற்றசாட்டு இருக்கிறதே அப்படி இருக்கும்போது சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான் எனது கேள்வியாக இருந்தது.

இந்தக் கேள்வி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே திரு. வைகோ அவர்கள் எழுந்து சென்றுவிட்டார். இது தான் நடந்தது. மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற விஷயங்களை தொகுத்து சம்பந்தபட்டவர்களிடம் கேள்விகளை முன் வைக்கிறோம். ஒரு ஊடகவியலாலனாக நானும் அதைத்தான் செய்திருக்கின்றேன்.
எங்களது தொலைக்காட்சியை பொருத்தமட்டில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. நடு நிலையோடு செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்“ என்று தெரிவித்துள்ளார்.
நேர்காணலின்போது கோபத்துடன் வைகோ வெளியேறிய அந்த வீடியோ காட்சியை காண இங்கு கிளிக் செய்யவும்...

ad

ad