புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2016

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை. தொகுதிப் பங்கீடுதான் வைத்திருக்கிறோம்: திருமா பேச்சு


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இணைந்தவுடன் அக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் திங்கள்கிழமை இரவு நடந்தது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டார். மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சந்திரகுமார், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சின்னங்களை சொல்லி இங்கிருந்துதான் முதல் முதலாக வாக்கு சேகரிக்கிறோம். அதனால் இந்தக் கூட்டம் தான் முக்கியமான கூட்டம் என்றார்.

திருமாவளவன் பேசுகையில், தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி, கூட்டணி வைக்கவில்லை. தொகுதிப் பங்கீடுதான் வைத்திருக்கிறோம் என்றார்.

வைகோ பேசும்போது, நேற்று (ஞாயிறு) இரவு ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு பெரிய கண்டெய்னர் லாரி நேர் வழி பாதையில் போகாமல், கிராமங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான கோடி பணத்துடன் சென்றது. இன்று (திங்கள்) சிறுதாவூர் பங்களாவில் 10 லாரிகள் நிறைய பணங்கள் கொண்டு சென்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பாவிகளிடம் பத்தாயிரம், 20 ஆயிரம். 5 ஆயிரம் பணத்தை பறிக்கும தேர்தல் கமிஷன், உடனடியாக சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை சோதனையிட்டு கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் பணம் பட்டுவாடா இல்லாமல் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் கொடுத்திருக்கிறேன் என்றார்.

ad

ad