திங்கள், மார்ச் 28, 2016

பலமான அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

உலக கோப்பை டி20 போட்டியில் விராட் கோஹ்லி அசத்தலால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது
. அரையிறுதியை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மொகாலியில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்சும், கவாஜாவும் தொடக்கம் தந்தனர். கவாஜா அதிரடியாக ஆடி பும்ரா வீசிய 2-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் பின்ச் 2 சிக்ஸ் அடிக்க ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணி 4 ஓவரில் 50 ரன்களை தொட்டது. கவாஜாவை 26 ஓட்டங்களிலும், வார்னரை 6 ஓட்டங்களிலும் அஸ்வின் வீழ்த்தினார். கேப்டன் சுமித்தை 2 ஓட்டங்களில் யுவராஜ் வீழ்த்தினர் பின்னர் வந்த பின்ச் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 31 ஓட்டங்களில் போல்ட் ஆனார். பால்க்கனர் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக நெஹ்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பாண்டிய இரண்டு விக்கெட்டும், யுவராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ஓட்டங்களிலும், தவான் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த சுரேஷ் ரெய்னா 10 ஓட்டங்களிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 7.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்த நிலையில் யுவராஜ் சிங் 21 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.. நிதானமாக விளையாடிய கோஹ்லி 19 ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். இந்திய அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (82), டோணி (18) அவுட் ஆகாமல் இருந்தனர். விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.World T20 - 31st match, Super 10 Group 2
India won by 6 wickets (with 5 balls remaining)
27 March 2016 - day/night match (20-over match)
 Australia innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalUT Khawajac †Dhoni b Nehra26191660162.50
View dismissalAJ Finchc Dhawan b Pandya43573432126.47
View dismissalDA Warnerst †Dhoni b Ashwin61590066.66
View dismissalSPD Smith*c †Dhoni b Yuvraj Singh2660033.33
View dismissalGJ Maxwellb Bumrah31322811110.71
SR Watsonnot out18321620112.50
View dismissalJP Faulknerc Kohli b Pandya10111010100.00
PM Nevillnot out103211500.00
Extras(lb 2, w 11, nb 1)14
 Total(6 wickets; 20 overs)160(8.00 runs per over)
 BowlingOMRWEcon0s4s6s 
View wicketA Nehra402015.001330
View wicketJJ Bumrah403218.00750
View wicketR Ashwin2031115.50212(3w)
 RA Jadeja302006.66811(1w)
View wicketYuvraj Singh301916.33600(1nb, 2w)
View wicketsHH Pandya403629.00841(1w)
 India innings (target: 161 runs from 20 overs)RMB4s6sSR
View dismissalRG Sharmab Watson1225171070.58
View dismissalS Dhawanc Khawaja b Coulter-Nile13161211108.33
V Kohlinot out82785192160.78
View dismissalSK Rainac †Nevill b Watson109710142.85
View dismissalYuvraj Singhc Watson b Faulkner21311811116.66
MS Dhoni*†not out18291030180.00
Extras(lb 3, w 2)5
 Total(4 wickets; 19.1 overs)161(8.40 runs per over)
 BowlingOMRWEcon0s4s6s 
 JR Hazlewood403809.50841(1w)
View wicketNM Coulter-Nile403318.251060(1w)
View wicketsSR Watson402325.75820
View wicketJP Faulkner3.1035111.05441
 GJ Maxwell201809.00101
 A Zampa201105.50601

MATCH DETAILS