புதன், ஜூலை 20, 2016

நளினியின் மனு சென்னை மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினியின் மனுவை சென்னை மேல் நீதிமன்றம்
தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்துவருகின்றார்.
இந்த நிலையில் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சென்னை மேல் நீதிமனறத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் நளினியை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசு ஏற்கனவே பதில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.