செவ்வாய், அக்டோபர் 18, 2016

சிசுவை விற்பனை செய்த தாய் உட்பட மூவர் கைது

50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வகையில் 11 நாளான சிசுவொன்றை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50000 ரூபா பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலி பொலிஸாரினால் குறித்த சிசுவின் தாய், அவரது தாய் மற்றும் உதவிய நபர் ஒருவர் ஆகியோர் நேற்று கைது செய்யப்ப ட்டுள்ளனர். 27 வயதான சிசுவின் தாய் முறையாக திருமணம் செய்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவத்தின் பின்னர் சிசு வீட்டுக்கு கொண்டு வரப்படாமை குறித்து உறவினர்கள் விசாரித்து அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிசுவை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தவர் குறித்த பெண்ணுடன் இரகசிய தொடர்பினை பேணியவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.