புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2019

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் - சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையை சரியாக செய்தோம், இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எங்களுடைய பணியை சிறப்பாக செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். திமுக ஆட்சி காலத்தில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம் . எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். 7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையை சரியாக செய்தோம், இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவரை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது.


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எங்களுடைய பணியை சிறப்பாக செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.

ad

ad