புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2019

முன்னாள் எம்பியான ஜே.சிறீரங்காவுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டுள்ளது

2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18) சற்றுமுன் பிணை வழங்கியுள்ளது.

சிறீரங்கா மற்றும் நான்கு பொலிஸார் உள்ளிட்ட அறுவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் சிறீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். இந்த வழக்கிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிறீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த போது, செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்.உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சிறீரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருந்தது.

ad

ad