புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


இயந்திர போராட்டத்தில் ஈழம் கிடைத்தால் உலகம் அங்கீகரிக்கும்! இது அரியம் சிந்தனை
இன்று அ, ஆ, இ, ஈ, உ என்பது தமிழ் மக்களின் ஐந்து தலை எழுத்தாகும். இந்த ஐந்து தலை எழுத்தும் மஹிந்த சிந்தனையல்ல அரியம் சிந்தனையாகும். இந்த சிந்தனையில்,என்கின்ற இராஜதந்திரப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடாத்தி வருகின்றோம்.
இந்த போராட்டம் வெற்றியளிக்கும் போது உ என்கின்ற உலகம் எங்களை அங்கீகரிக்கும். எனவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று சாகாம வீதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சின்னையா சியாம் சுந்தரின் கட்சி காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது இனத்துக்கான விடுதலைப் போராட்டம் என்பது அகிம்சை ரீதியாக 30 வருடமும் ஆயுத ரீதியாக 30 வருடமாக இடம்பெற்றதன் பிற்பாடு, 2009 ஆண்டு மே 19ம் திகதி முள்ளிவாய்காலில் இந்தபோராட்டம் முற்றுப் பெற்றுவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது.
அதன் பின் ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு பின் எந்தவொரு அரசியல் பலமும் இந்த மண்ணிலே இல்லை என்று ஒட்டுமொத்தமாக தான் தலைவராக இருந்துவிடலாம் என்று நினைத்தார்.
ஆனால் 2010 ஆண்டு ஏப்பிரல் மாதம் ஏற்பட்ட அந்த பாராளுமன்ற தேர்தலிலே தமிழ் மக்கள் தமக்கு அரசியல் பலம்தேவை தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதை உணர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் அந்த அரசியல் பலம் என தமிழ்மக்கள் வாக்களித்ததன் காரணமாக 14 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று மீண்டும் தமிழ் மக்களின் சக்தியாக பரிநாமிக்கின்றோம்.
இந்த முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிற்பாடு ஐ.நா சபை போர்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதேவேளை இலங்கை அரசால் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்னொரு அறிக்கையையும் வெளியிடப்பட்டது.
இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் இருக்கின்ற பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென ஐ.நாடுகள் சபையில் ஒரு பிரேரணையும் கொண்டுவந்தபோது ஆதரவாக இருந்த வல்லரசுகளான அமெரிக்காவும் இந்தியாவும் உட்பட 25 நாடுகள் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென கொடுத்த அழுத்தம் இப்பொழுது இருக்கிறது.
இந்த அழுத்தம் என்பது இலங்கையரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழுத்தத்தில் இருந்து இந்த அரசு தப்புவதற்காக கிழக்கு மாகாணசபை தேர்தலை கையிலே எடுத்துள்ளதுடன் கிழக்கு மாகாண மக்கள் தங்களிடம் இருப்பதாக 8ம் திகதி வாக்களிப்பதன் மூலமாக நிரூபிப்பார்கள் என்பதை அரசு நம்பிக் கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த நெருக்கடிக்கு எந்த வகையில் பதில் கொடுக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எடுக்கின்ற முடிவாக இருந்து கொண்டிருக்கின்றது.
கடந்த 4 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி, உள்கட்டுமானம், பாலம், குளம், உள்வீதிகள் போன்றவைகளை புனரமைப்பதற்கு யப்பான், கொரியா மற்றும் ஆசிய அபிவிருத்திவங்கி, பிரான்ஸ், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனம் என்பன வடக்கு கிழக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திக்காக கொடுக்கப்பட்ட பலமில்லியன் ரூபாக்களை கொண்டு செய்யப்பட்டது. இலங்கை அரசால் எதுவிதமான நிதி ஒதுக்கீடும் ஒதுக்கப்படவில்லை.
ஆயுதம் தாங்கி பிரபாகரன் நடாத்திய “ஆ” உதாசீனம் செய்தபடியால் முள்ளிவாய்காலில் முடிவுற்றது. இன்று “இ” என்ற இராஜஜதந்திர போராட்டத்தை வடக்கு கிழக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஜயா எடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இதற்கு புலம்பெயர் தமிழ்மக்கள் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவுகளுடன் இடம்பெற்று வருகின்றது. இந்த இராஜஜதந்திர போராட்டம் சரியாக வருமாக இருந்தால் “ஈ” என்கின்ற ஈழம் கிடைக்கின்ற போது “உ” என்கின்ற உலகம் எங்களை அங்கீகரிக்கும்.
ஆகவே இது மஹிந்த சிந்தனையல்ல. அரியம் சிந்தனையாகும் இன்று சர்வதேசத்தின் வாசல்படியில் தட்டிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான வழி கிழக்கு மாகாண மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ad

ad