புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

வடபகுதி மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிக்குள்! நேரில் அவதானித்ததாக ஐ.நா. அலுவலர் கருத்து
இலங்கையில் மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் திருப்தியாக இருந்தாலும் மக்களது அடிப்படைத் தேவைகள் இன்னமும் கவலைக்கிடமானதாகவே இருக்கிறது என ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஜோன் கிங் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியபின் நேற்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு தான் மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்ததாகவும்,அதன்போது போரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தான் யாழ்ப்பாணத்துக்கும் சென்று அங்குள்ள மக்களது நிலைகுறித்தும் கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்து இப்போது மீள்குடியேற்றப்பட்ட தெல்லி்ப்பழைக்கும் தான் சென்றதாகவும்,அந்த இடம் மக்கள் வாழ்வதற்கே உகந்ததல்லாமல் மாறியுள்ளதாகவும்,ஆனாலும் மக்கள் தமது சொந்த ஊருக்கு திரும்பிவிட்ட சந்தோசத்தில் பாழடைந்த வீடுகளைப் புனரமைத்துவருவதாகவுத்,தான் அந்த மக்களுடன் நேரடியாக உரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போர் முடிவுற்றதன் பின்னர் 440,000 மக்களை இலங்கை அரசு மீள்குடியமர்த்தியுள்ளது. இது முன்னேற்றம் தரத்தக்க விடயம். ஆனாலும் அவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் பலர் இன்னமும் அடிப்படைச் சேவைகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி என்பன குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளன.
இலங்கை அரசு உருவாக்கியுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் அமைதி மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முயற்சித்து வருவதைத் தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் மீண்டும் கௌரவாக வாழ்ந்து தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப ஐ.நா. அலுவலகமும், இதர சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகக் கூறும் அவர் வட பகுதியில் மக்கள் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.
எனவே மீளக்குடியமர்ந்தவர்கள் தங்களது தற்போதைய நிலை குறித்து திருப்தி அடைய முடியாது, அவர்கள் திருப்தி அடையக் கூடாது, நாமும் திருப்தி அடையக் கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நிலை மாறி, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்றால், கொடையாளி நாடுகள் தமது உதவிகள் மற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் ஐ நா வின் தமது அலுவலகம் கோருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
வட மாகாண மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதியுதவியில் 20 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் சர்வதேச நிதியுதவியில் 80 சதவீதம் குறைந்த நிலையில், அதன் காரணமாக மக்கள் பெரும் துன்பத்தை தேவையில்லாமல் எதிர்கொள்கிறார்கள் என்றும் ஜான் கிங் கூறினார்.
எனினும் அரசிடம் சில செயல்திட்டங்கள் இருக்கின்றன எனவும் அவை நடைமுறைபடுத்தப்படும் என்கிற நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மீதமுள்ள மனிதநேயத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு தான் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.

ad

ad