புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

ஒலிம்பிக்கில் முஸ்லிம்களுக்காக தளர்த்தப்பட்ட விதிமுறை
முஸ்லிம்களுக்காக பளு தூக்குதல் போட்டியில் முதல் முறையாக ஆடை விதி முறைகள் தளர்த்தப்பட்டது. அதன்படி முழு உடலையும் மறைக்கும் உடையணிந்து ஒலிம்பிக் பளு தூக்குதலில் பங்கேற்றார் துனிஷிய வீராங்கனை காதா ஹசீன்.

பளு தூக்குதலில் பங்கேற்பவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையில் உடையணியக் கூடாது என்பது பொதுவான விதி.

இந்நிலையில் கடந்தாண்டில் அமெரிக்கா சார்பில் இந்த விதியை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த கோரிக்கையை முன்வைத்தது. அதன்படி பளு தூக்குதலில் முழு உடை அணிந்து பங்கேற்கலாம் என்று விதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக முழுமையாக உடலை மறைக்கும் உடையை அணிந்து போட்டியில் பங்கேற்றார் துனிஷிய வீராங்கனை காதா ஹசீன்.

19 வயதாகும் அவர் 69 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ad

ad