புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

ஒலிம்பிக் விழாவில் இந்திய அணியுடன் சென்ற பெண் தொடர்பில் சர்ச்சை; இந்தியாவை மன்னிப்புக் கோரியது ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு
ஒலிம்பிக் தொடக்கவிழாவின் போது அணிவகுப்பில் இந்திய அணியுடன் சென்ற பெண் ஒருவர் தொடர்பில் லண்டன் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்திய ஒலிம்பிக் அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
news
இது தொடர்பான மன்னிப்புக் கடிதத்தினை ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக லண்டன் சென்றுள்ள இந்திய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த 27ம் திகதி லண்டனில் ஆரம்பமாகிய 30ஆவது ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமையில் இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுஷில் குமார் அருகே நடந்து சென்றார். இந்திய அணியுடன் சேர்ந்து மைதானத்தை அவர் முழுமையாக வலம் வந்தார்.
எனினும் இந்திய அணிக்கும் அப்பெண்ணுக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத போதும் அப்பெண் இவ்வாறு நடந்து கொண்டது குறித்து இந்திய ஒலிம்பிக் குழு சார்பில் போட்டி ஏற்பாட்டாளர்களிடம் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்த மதுரா ஹனி என்று தெரியவந்தது. இப்போது பிரிட்டனில் வசித்து வரும் அவர், தொடக்கவிழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது ஆர்வ மிகுதியில் இந்திய அணியுடன் சேர்ந்து அவர் வலம் வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
எனினும் இந்த சம்பவம் ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வியை எழுப்பியது. அவர் முழு சோதனைக்குப் பின்புதான் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார் என்று ஏற்பாட்டுக் குழுவினர் சமாதானம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரி கடிதமும் அளித்துள்ளனர். இதனால் இச்சர்ச்சையானது இத்துடன் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad