புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2012

திருச்சியில் சிங்கள மாணவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! நிகழ்வின் இடைநடுவில் வெளியெறிய மாணவர்கள்
 
தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற சிங்கள மாணவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இவ் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நிகழ்வின் இடைநடுவில் மாணவர்கள் வெளியேற நேர்ந்துள்ளது.
இலங்கையிலிருந்து 70 சிங்கள மாணவ,மாணவியர் இரு நாள் நிகழ்வில் கலந்துகொள்ள அங்கு வந்திருந்ததாகவும், ஆயினும் அங்கு அவர்களது வருகைக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களை தாம் திருப்பி அனுப்ப நேர்ந்ததாகவும், இந்த நிகழ்வால் தாம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகவும் கலைக்காவேரி நிறுவனத்தின் அதிபரான அருட் சகோதரி மார்கிரட் பாஸ்ரின் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மாணவர்கள் மீது இலங்கை அரசாங்க தரப்பினர் தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாகவே தாம் அந்த மாணவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி அவர்களை அந்த கலைப்பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொள்ள விடாமல் செய்ததாக நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இராணுவத்தினர் தமிழ் மாணவர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான பதில் நடவடிக்கையாகவே தாம் இதனை செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கலை என்பது மத, அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டது. இப்படியான நடவடிக்கைகளால் மாணவர்கள் மனதில் தமிழர் பற்றிய வெறுப்புணர்வே அதிகரிக்கும் என்று கலைக்காவேரி நிறுவனத்தின் அதிபரான அருட் சகோதரி பாஸ்ரின் கவலை வெளியிட்டுள்ளார்.

ad

ad