புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2012

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள்

முத்தரசன், வீரபாண்டியன், கண்ணன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- 

2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இதே இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நாம் நடத்திய பிறகுதான் ஈழத் தமிழர்களின் பிரச்சினை, அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டிய அவசியத்தை உலகம் தெரிந்து கொண்டது. அதேபோல இதுவும் ஒரு முக்கியமான போராட்டம். 

இலங்கை மக்களுக்காக குரல் கொடுக்கும் முதல் கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி திகழ்கிறது. இந்தியாவின் உதவி இல்லாமல் இலங்கை தமிழர்களை வென்று இருக்கமுடியாது. இந்த வெற்றிக்கு உதவி செய்தது இந்திய அரசுதான் என்று ராஜபக்சே பலமுறை கூறியிருக்கிறார். 

போருக்கு பின்னால் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் ராணுவத்தினர் பிடியில் தினந்தோறும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்கள். ஒரு கொடுங்கோல், பாசிச ஆட்சியாக திகழும் இலங்கை அரசுக்கு தொடர்ந்து இந்திய அரசு உதவி செய்து வருவதை நாம் எதிர்க்கிறோம். 

ஆனால் இதற்கு மத்திய அரசு, இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது என்று பதில் அளிக்கிறது. இதை ஏற்க முடியாது. இலங்கை அரசுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப முடியாத நிலை உள்ளது. 

நிலக்கரி ஊழல் வழக்கில் காங்கிரசும், பா.ஜனதாவும் திட்டமிட்டு பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது. பாராளுமன்றம் செயல்பட்டால் தாங்கள் அம்பலப்பட்டு போவோம் என்ற காரணத்திலேயே சபையை நடக்காமல் பார்த்து கொள்கிறார்கள். 

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை பிரச்சினையில் மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது. மத்திய அரசில் தி.மு.க.விற்கு மரியாதை இல்லாவிட்டால் உங்களை மதிக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ad

ad