புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2012

தென் ஆபரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 உலக கிண்ண சுப்பர் 8 போட்டியில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற சுப்பர் 8 போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய தென்னாபிரிக்காவை துடுப்பெடுத்தாடப் பணித்தது. 


இதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக பீட்டர்சென் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அவுஸ்திரேலியவின் டொஹார்ட்டி பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டு 4 ஓவர்களுக்கு 20 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

147 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலியா 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பினை பலப்படுத்திக்கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக வொட்சன் (70) மற்றும் ஹசி (45*) சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியினை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வொட்சன் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

ad

ad