புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2012


கேப்பாபிலவு மக்களுக்கான உதவிகளை இராணுவம் தடுக்கிறது' B B C

கேப்பாபிலவில் இராணுவ முகாம் உள்ளதால் அங்கு மக்களை குடியேற்றமுடியாது என்று அரசு கூறுகிறது
கேப்பாபிலவில் இராணுவ முகாம் உள்ளதால் அங்கு மக்களை குடியேற்றமுடியாது என்று அரசு கூறுகிறது
இலங்கையில் மனிக்பாம் முகாம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து சீனியாமோட்டை என்ற காட்டுப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட கேப்பாபிலவு மக்களுக்கு வெளியாரின் நிவாரண உதவிகள் கிடைப்பதிலும் இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்
குற்றஞ்சாட்டுகின்றனர்.
சொந்த இடத்தில் குடியேற்றப்படாது வேறு இடத்துக்கு அனுப்பப்பட்ட இந்த மக்களுக்கு இன்னும் எந்தவிதமான அரசாங்க உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் அக்கட்சியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
அரசின் உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில், அந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தாங்கள் ஏற்பாடு செய்திருந்தபோது, அதற்காக காத்திருந்த மக்களிடம் அப்படி நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படாது என்று கூறி இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் கூறினார்.
பின்னர் உள்ளூர் கிராமசேவகர்களூடாக குறித்த பகுதிக்கு சென்று தாங்கள் நிவாரணங்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன்

அரசாங்கத்திடமிருந்து ஒழுங்கான குடிநீர் வசதிகள் கூட அமைத்துக்கொடுக்கப்படவில்லை என்றும் வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்படவில்லை என்றும் கஜேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மக்கள் தாமாகவே வீடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த மக்களின் பிரச்சனைகள் வெளியுலகுக்கு தெரியாதவாறு தடுக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கேப்பாபிலவு மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ள அரசாங்க அதிகாரிகள் தவறுவதாகவும் அதனால் அவர்களின் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் தெரிவித்தார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர் அங்கு சென்றுதிரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், சீனியாமோட்டையில் தங்கியுள்ள கேப்பாபிலவு மக்கள் வெளியாரை சந்திக்கமுடியாத படி இராணுவத்தினர் கெடுபிடிகளை விதித்துவருவதாக குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

ad

ad