புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2012


தமிழீழத்தை கைவிடுங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் அழுத்தம்!
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது.
இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது.
தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கான இறுதித் தீர்வாக அமையுமென்பதனை  குறித்த நாடுகளுக்கு உறுதிபடத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை வென்றெடுப்பதற்கான விடுதலைப் பாதையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர்களின் பேராதரவுடன் செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தனது உத்தியோகபூர்வ அரச அமர்வுகளில் தமிழீழத் தேசியக் கொடியினை வெளிக்கொண்டுள்ளதோடு தமிழர் தாயகத்தில் அன்று நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசின் தொடர்சியாக உருப்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்க ஜனநாயக வழிமுறையூடாக சர்வதேச அங்கீகாரத்தினை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ad

ad