புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2012


விடுதலைப்புலிகள் சார்பில் வாதாடும் சுவிஸ் சட்டவாளர்களுக்கு இலங்கை நுழைவிசைவு வழங்க மறுப்பு
விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புக்கு எதிரான வழக்கில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளனர்.
சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள், இலங்கையில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இந்த வாரமும் அடுத்த வாரமும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும், இந்த விசாரணைகளில் பங்கேற்க கொழும்பு வருவதற்கு எதிர்தரப்பு சட்டவாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டது.
அரச சட்டவாளர்களுடன் ஐந்து காவல்துறை அதிகாரிகள், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் கொழும்பு வரவுள்ளனர்.
எதிர்த்தரப்பு சட்டவாளர்களுக்கு இலங்கை அரசு நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டதால, அவர்கள் பேர்ணில் இருந்தவாறு சாட்சிகளிடம் நடத்தப்படும் குறுக்கு விசாரணைகளில் நேரலை காணொலி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இதன் மூலம் சாட்சிகளிடம் அவர்கள் கேள்விகளை எழுப்ப முடியும்.
இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் விடுதலைப் புலிகளின் சட்டவாளர்களுக்கு நுழைவிசைவு வழங்க இணங்கிய போதும், இலங்கை வெளிவிவகார அமைச்சு தலையிட்டு அதை நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad