புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2012


கிழக்கின் தேர்தல்: பிள்ளையானின் தோல்வி; TNAயின் வெற்றி?
 •  ‘பிள்ளையான்’ என்கிற முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் குறுகியகால அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கான மிகமுக்கிய படியாக இருக்கும். 

 
• தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மிக முக்கிய தோல்வியாக ‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்’ இணைந்து போட்டியிட்டமை இருக்கப் போகிறது. ‘பிள்ளையான்’ மட்டுமே அந்தக் கட்சியிலிருந்து(TMVP) வெற்றிபெறுவதற்கான சாத்தியமுண்டு.
 
• முஸ்லிம் முதலமைச்சரொருவர் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்ற போதிலும் அதனை முறியடிப்பதற்கான முயற்சிகளை ‘மஹிந்த ராஜபக்ஷ’ அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு நடத்தி வருகிறது. 
 
• ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ வெற்றிபெற்று முதலமைச்சர் ஆவதைக் கூட மஹிந்த அரசாங்கம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனாலும். முஸ்லிம் காங்கிரசிலிருந்து முதலமைச்சர் வருவதை தவிர்க்க விரும்புகிறது. 
 
• ‘வாக்காளர் விகிதாசாரம்’ என்கிற கள நிலமைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -முஸ்லிம் காங்கிரசுடன் இணக்கப்பாடு ஒன்றுக்கு வர எத்தனிக்கிறது. அதற்கான விருப்பத்தை மு.காவும் ஓரளவுக்கு வெளிப்படுத்துகிறது. (தேர்தலுக்குப் பின் அப்படியான வாய்ப்பும் இருக்கிறது.)
 
• அம்பாறையில் அமைச்சர் அதாவுல்லாவின் அரசியலுக்கான பலத்த அடியொன்றை இந்த தேர்தல் குறிப்பிட்டளவில் வழங்கலாம். 
 
•  (முன்னாள் கருணா இந்நாள்) அமைச்சர் முரளிதரன் தன்னுடைய சகோதரியை முன்வைத்து நடத்துகிற அரசியல் பெரியளவில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. 
 
• மாகாண- தேசிய அரசியலில் இருந்து முரளிதரன் மிகவிரைவில் பின்னுக்குத் தள்ளப்படுவார். அதற்கான அறிகுறிகளை இந்த தேர்தல் முடிவுகளும் வழங்கலாம். (‘தேசியப் பட்டியல்’ என்பது முரளிதரனின் இறுதிக்காலம் வரை வழங்கப்பட வாய்ப்பில்லை.)
 
• திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அம்பாறையில் முஸ்லிம் காங்கிரசும் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.
 
• தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான வெற்றி ஆசனங்களில் வித்தியாசம் 1 முதல் 3 க்குள் இருக்கலாம். 
 
• இறுதியாக முஸ்லிம் காங்கிரஸ்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் அறுதிப் பெரும்பான்மையுள்ள கிழக்கு மாகாண சபை சாத்தியம். 
 
• தோல்விகளின் நீட்சியை ஐக்கிய தேசியக் கட்சி இங்கும் பதிந்து கொள்ளும்.
 
-இது எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெற இருக்கும் ‘கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2012’ குறித்த பருமட்டான பார்வை. இதில் சாத்தியங்களும்- அசாத்தியங்களும் உண்டு!!
 

ad

ad