புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2012


தேசிய வீராங்கனை பிருந்தா இராமசாமி..
Se
 பெற்றவர்களையும் தான் பிறந்த தேசத்தையும் பெருமை படுத்துவதே ஒரு குழந்தையின் மிக உயர்ந்த செயலாகும். அந்த பெருமையை நம் ஊருக்கும் தான் பிறந்த கனடிய தேசத்திற்கும் தேடி தந்திருக்கிறார் பன்னிரண்டு வயதே நிரம்பிய பிருந்தா இராமசாமி, டெனிஸ் வீராங்கனை. செல்வி பிருந்தா
இராமசாமி பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட டெனிஸ் விளையாட்டில் 2012க் கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
 
கனடா டெனிஸ் சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்த அகில கனேடிய போட்டி கடந்த மாதம் குபெக் மாநிலத்தில் Mont-Tremblant நகரத்தில் நடந்தேறியுள்ளது. இறுதி சுற்றில் பிருந்தா வெற்றி பெற்று தேசிய வீராங்கனை விருதை வென்றுள்ளார். இவ்வாண்டிற்கான இரட்டையர் டெனிஸ் விளையாட்டிலும் இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி அனுபவங்களை பற்றி பேசும் போது கடும் முயற்சிக்கும், இடைவிடா பயிற்சிக்கும் தனக்கு கிடைத்த பரிசு என்று மகிழ்ச்சி அடைகின்றார். விளையாட்டில் வெற்றி பெறுவதே இலட்சியம். ஆனால் அது எப்போதுமே சாத்தியம் ஆவதில்லை. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சாகசம். விளையாட்டில் வெற்றி கிடைக்காமல் போனால் நான் சோர்வடைய மாட்டேன். மேலும் முனைப்புடன் பயிற்சி செய்வேன். மேலும் இம்முறை எனது முயற்சிகளும், இதைவிட பயிற்ச்சியும் வெற்றியை தேடி தந்திருக்கிறது என்கிறார் பிருந்தா.
 
பிருந்தா ஐந்து வயதில் இருந்து தனது டெனிஸ் பயிற்ச்சியை Scarboroughஇல் உள்ள L’amoreaus Tennis Centreல் தொடங்கியவர். தொடர்ந்து வடயோர்க் டென்னிஸ் கழகம், கனடா டெனிஸ் அமைப்புகளின் ஊடாகவும் பயிற்ச்சிகளை பெற்றுள்ளார். இவரது பயிற்சியாளர் டயலோர் ப்றேச்கோட் (Tylor Prescott) ஆவார் . இவரது பயிற்சி முறை பற்றி பிருந்தா இவ்விதம் விவரிக்கிறார்.
 
“I have tried to follow up a schedule set up by my coach Tylor, which includes private lessons, group practices at NYTA and Tennis Canada. I also had extra hitting with my sister, Luxmi in our spare time. “
 
இவரது சகோதரி லக்சுமியும் டெனிஸ் வீராங்கனை. தனது வயதுப் பிரிவில் டெனிஸ் கனடாவுக்காக விளையாடி இருக்கின்றார். சிலவற்றில் பரிசில்களும் பெற்றிருக்கின்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிருந்தாவின் டெனிஸ் ஆர்வத்துக்கு சகோதரி லக்சுமியும் ஒரு காரணமாக இருந்து வருகின்றார். 
பிருந்தா 2010 ஜூலையில் ஒட்டாவாவில் நடந்த Roman Cup Memorial Champion 10 வயதுக்குட்பட்டோர் போட்டியில் கலந்து இறுதி சுற்றில் வெற்றி பெற்று வீரன்கனைகுரிய பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார். 2010 செப்டெம்பரில் ஒன்டாரியோ மாநிலம் நடத்திய சுற்று போட்டியிலும் வெற்றி பெற்ற வீராங்கனை ஆகியுள்ளார். 2011 ஆகஸ்ட் மாதத்தில் குபெக் மாநகரில் நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய டெனிஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றார். 2012 பெப்ரோரியில் ஒன்டாரியோ மாநிலத்தின் உள்ளிட சுற்றுப் போட்டியில் வீராங்கனை விருது பெற்றுள்ளார். 2012 மார்ச்சில் கால்கறியில் இடம்பெற்ற உள்ளிட போட்டியிலும் இறுதி ஆட்டக்காரர் ஆனார்.
கனடா தவிர அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளிலும் நடைபெற்ற டெனிஸ் போட்டிகளிலும் கனடாவை பிரதிநிதித்துவப் படுத்தி பிருந்தா விளையாடி உள்ளார். இவற்றில் சில விபரங்கள் பின்வருமாறு:
 
November 2011- U12 Casley International Tournament Champion in Florida 
November 2011- U12 Eddie Herr International Tournament in Florida 
February 2012- U12 Auray International Tournament in France 
July 2012 –U12 International Tournament in Italy
 
கடந்த ஆகஸ்ட் மாத வெற்றிக்கு இந்த வெளிநாட்டு அனுபவங்களும் பிருந்தாவுக்கு வாய்ப்பாக இருந்தது என்பதில் ஐயமில்லை. அத்துடன் இவரின் திட்டமிட்ட வாழ்க்கை முறையும் காரணமாகின்றது.
பிருந்தா கலை 5 மணிக்கே எழுந்து யோகாசனம் பயில்கின்றார். பின்னர் பாடசாலைக்கு செல்வதற்கு முன் ஒரு மணி நேரம் டெனிஸ் ஆடுகின்றார். பாடசாலை முடிந்ததும் இரண்டு மணிநேரம் டெனிஸ் ஆடுகின்றார். இது இவரது இது தவிர கிழமைகளில் மூன்று நாட்களில் டெனிஸ் கனடா நிலையத்திலும், ஐக்கிய தமிழர் விளையாட்டு கழகத்திலும் உடல் பயிற்சி பெற்று வருகின்றார். மேலும் தனது குடும்பம் அளித்து வரும் ஊக்கத்தை பற்றி பிருந்தா சொல்வது இவை:
 
“ My family played a huge role. My dad and mom give training sometimes and my sister helped me to improve a lot because she is my hitting partner and helps me to be a better player. All my relatives and friends are also supporting and encouraging me all the time”.
 
வருங்காலத்தில் டெனிஸ் விளையாட்டில் பிருந்தா தொடர்ந்து சாதனைகள் படைக்கவும், அவருக்கு பிடித்த “மரியா ஷரப்போவா” போன்று சிறந்த டெனிஸ் வீராங்கனையாக வரவும் அனலை கலாச்சார ஒன்றியம் பெருமையுடன் வாழ்த்தி நிற்கிறது.
 
பிருந்தா போன்றோர்களை உதாரணமாக கொண்டு இங்கு வாழ்ந்து வரும் நம் இளம் சமுதாயம் பல துறைகளும் ஈடுபட்டு வெற்றிகளை ஈட்டி நம் பிறந்த ஊரையும், நம் வாழும் தேசத்தையும் பெருமை படுத்துவோம் என்று கூறி கொண்டு பிருந்தாவுக்கு மீண்டும் வாழ்த்துகளை அனலை கலாச்சார ஒன்றியம் கூறி நிற்கிறது.
 

ad

ad