புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012

பிரச்சனையில் தவிக்கும் இரவு விடுதிகளின் சொர்க்க பூமியான லாசேன் நகரம்(Lausanne)
கடந்த பத்தாண்டுகளில் லாசேன் இரவு விடுதிகளின் சொர்க்கமாக மாறியதில் சில பிரச்னைகளும் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு விடுதி உரிமையாளர்களும் அதிகாரிகளும் தீர்வு தேடிவருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் பிரெஞ்சு மொழி பேசுவோருக்கான இரவு விடுதிகள் மிகுந்த ஒரு நகரமாகும். இங்கு இரவு விடுதிகளில் நடக்கும் இசையின் ஓசை பெருவழிச்சாலையின் போக்குவரத்துக்கும் மற்ற கட்டிடங்களில் குடியிருப்போருக்கும் இடையூறாக உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மின்னணு இசைக்கருவிகளைக் கொண்டு 3 நாட்கள் நடத்தப்படும் இசைவிழாவான Electrosanneக்கு அதிகக் கூட்டம் கூடும். அருகில் உள்ள ஃபிரான்ஸ் மற்றும் ஜுரிச் பகுதிகளிலிருந்து 40000 பேருக்கு மேல் இவ் இசைவிழாவிற்கு வருகை தருவர்.
நகரின் மத்தியில் நடைபெறும் இவ்விழா உள்ளூரில் உள்ள ஐந்து விடுதிகளிலும் நடைபெறும். பொதுவாக வார இறுதியை அனுபவிக்க இரவு விடுதிகளுக்கு வருவோர் சுமார் 130,000 பேராவர். இது தவிர இங்குள்ள மதுபானக்கூடங்களுக்கும் உணவு விடுதிகளுக்கும் சுமார் 30000 பேர் வருகின்றனர்.
இபிசா தீவுக்கு அடுத்தப்படியாக லாசேனில் தான் இரவு விடுதிகள் அதிகமாக உள்ளன, என்று எலெக்ட்ரோ சான் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான பாடிஸ்டா டால் ரோச்சா தெரிவித்தார்.
ஜெனீவா ஏரியின் கரையில் உள்ள லாசேன் ஆரம்பத்தில் தினமும் மது விருந்து நடைபெறும் நகரமாக இருக்கவில்லை. கடந்த 1995ம் ஆண்டில் உள்ளூர் அதிகாரிகள் இரவு விடுதிகளின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தனர். நகரச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மத்திய ஃபிளான் மாவட்டம் இரவு விடுதிகளின் சொர்க்க பூமியாக மாறிவிட்டது.

ad

ad