புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012

ஈமுகோழிப் பண்ணை மோசடியில் கைதாகியுள்ள சுசி ஈமு கோழிப்பண்ணை அதிபர் குருசாமி போலீஸில் இன்று வாக்குமூலம் அளிக்கையில் 7 கள்ளக்காதலிகள் மற்றும் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், கல்லூரி காதலி ஏமாற்றியதால் பணத்தின் மீது மோகம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டதால் வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு சுசி ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்த குரு தமிழ்நாடு முழுதும் 30 கிளைகளைத்

திறந்தார்.

இதில் பலர் முதலீடு செய்தனர். இந்தத் தொகை முதிர்வு அடையும் போது தொகையை அவர் முதலீட்டாளர்களிடம் தரவில்லை இதனால் இவரது மோசடி அம்பலமானது.

கோவையில் மட்டும் இவர் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. சுமார் 1000 கோடி இவர் மோசடி செய்திருப்பதாக திடுக்கிடும் தக்வல்கள் வெளிவர அன்னார் தலைமறைவானார்.

தலைமறவான குருசாமியை போலீசார் சுற்றி வளைத்தனர். பிறகு அவரை தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்தான் தனது அமோக வாழ்க்கை வரலாற்றை வாக்குமூலமாக தெரிவித்தார் குருசாமி.

தான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் அப்படியும் தனது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தன்னை கல்லூரிக்கு படிக்க அனுப்பினர் என்றும் அங்கு தனக்கு பணக்கார பெண் ஒருவர் மீது காதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

'அவள் என்னை எடுத்திறிந்து பேசினாள், எனது காருக்கு உன்னால் பெட்ரோல் போட முடியுமா என்று அவமதித்தாள். இதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்டெர்நெட்டில் ஈமு கோழிப்பண்ணை குறித்து தெரிந்து கொண்டு நானும் என் மனைவியும் சுசி ஈமு கோழிப்பண்ணைத் தொடங்கினோம். பணம் சேர ஆரம்பித்தது. 2010ஆம் ஆண்டு கோழிப்பண்ணை கம்ப்னி ஆக்டில் நிறுவனத்தை மாற்றி, பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்றேன். பணம் வந்தது. ஏராளமான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

சின்னவீடுகளை வைத்துள்ளேன் இவர்கள் அனைவருக்கும் வீடு கார் என்று வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தேன். நான் தொடங்கும் கிளைகளை திறந்து வைக்க நடிகர், நடிகளை அழைத்தேன், சத்யராஜ், ஸ்னேகா ஆகியோரை திறப்பு விழாவுக்கு அழைத்து ரூ.25 லட்சம் கொடுத்தேன். இதனால் என் நிறுவனம் மீது மக்களுக்கு அதிக மோகம் ஏற்பட்டது. பணத்தை தாராளமாக முதலீடு செய்தனர்.

சின்ன வீடுகளிடம் எப்போதாவதுதான் போக முடியும், இதனால் துணை நடிகைகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். ஏராளமான துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.

அசோசியேட் டைரக்டர்கள் உதவியுடன் அந்த நடிகைகளை மும்பைக்கு அழைத்துச் சென்று பிரபல விடுதிகளில் தங்க வைத்து உல்லாசம் அனுபவித்தேன். இப்படியாக 80 வயது வரை என்னெல்லாம் அனுபவிக்க முடியுமோ அனைத்தையும் 30 வயதிலேயே அனுபவித்து விட்டேன்.

என்னிடம் உள்ள சொத்து விவரங்களை கொடுத்து விடுகிறேன். அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விடுங்கள். மோசடி செய்து கைதானதால் வருத்தப்படவில்லை'

இவ்வாறு கூறியுள்ளார் ஈமு கோழி புகழ் குருசாமி.

ad

ad