புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 1008 தேங்காய் உடைத்து சிறப்புப்பிரார்த்தனையொன்று வவுனியா குறுமண்காடு காளி கோயிலில் இடம் பெற்றது.
குறித்த சிறப்புப்பிரார்த்தனையின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்,காணாமல் போனவர்களைப் பத்திரமாக மீட்டுத்தரும்படியும் வவுனியா குறுமண் காட்டில் அமைந்துள்ள காளி

கோயிலில் காலை 10 மணியளவில் 1008 தேங்காய் உடைக்கப்பட்டு பிரார்த்தனை இடம் பெற்றது.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் ஆகின்ற போதும் தமிழ் அரசியல் கைதிகள் இது வரை விடுவிக்கப்படாத நிலையில் உள்ளனர்.

அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்டு வந்த முயற்சிகள் பலனற்றுப்போயுள்ளன.

இந்த நிலையில் காணமால் போனவர்களையும்,அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குறித்த சிறப்புப்பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ad

ad