புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012



நடுக்கடலில் 22 நாட்களாக தத்தளித்த 61 இலங்கை தமிழர்களை மீட்ட தமிழக மீனவர்கள்

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் அடைய சென்ற படகு பழுதானதால் ஒரு சிறுவர், 3 பெண்கள் என இலங்கை தமிழர்கள் 61 பேரும், 4 சிங்களவர்களும் 22 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை நாகப்பட்டிணம் மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வல்வட்டித்துறை, பருத்தித்துறை, நீர்கொழும்பு, முல்லைத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 61 இலங்கை தமிழர்களும், 4 சிங்களவர்களும் இலங்கையில் போதுமான வேலைவாய்ப்பும், வருமானமும் இல்லாத காரணத்தால் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரே-யாவில் தஞ்சம் அடையும் நோக்கத்தோடு போலீயான ஏஜெண்டிடம் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூபாய் 3 லட்சம் வரை கொடுத்து ஒரு விசைப்படகில் 65 பேரும் கடந்த 22.08.2012 அன்று இலங்கையின் பருத்தித்துறையில் இருந்து ஆஸ்திரே-யாவுக்கு புறப்பட்டனர்.
இவர்கள் இலங்கையில் இருந்து தெற்கு நோக்கி இரண்டு நாட்கள் பயணம் செய்து சுமார் 450 கி.மீ, கடந்து சென்றபோது, படகு பழுதாகி பாதியில் நின்றது. அதனைத்தொடர்ந்து பாய்மரத்தினை விரித்து, காற்றுபோகும் வழியில் சென்றுள்ளனர். படகில் உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கூட கிடைக்காமல், சுமார் 22 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த தம்பிராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நாகப்பட்டிணத்திற்கு நேர் கிழக்கே சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு கடந்த 12.09.2012 அன்று காலையில் கரைதிரும்பிக்கொண்டிருந்தனர். 

அப்போது நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை தமிழர்களின் அலறலை கேட்டு தமிழக மீனவர்கள் அவர்களை மீட்டு, தேவையான உணவுப்பொருட்களை கொடுத்ததுடன், தங்கள் படகில் இலங்கை தமிழர்களின் படகை கட்டி இழுத்துக்கொண்டு இரண்டு நாட்கள் பயணம் செய்து இன்று (14.09.2012)  அதிகாலை 1 மணி அளவில் நாகை துறைமுகத்தை வந்தடைந்தனர்.
மேலும் கரைக்கு வந்த இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமானத்தோடு மீனவர்கள் உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்தவர்களை, நாகை புத்தூர் அண்ணா மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களிம் விசாரணையும் மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் மீண்டும் அவர்களை இலங்கைக் அணுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் மற்றும் செய்தி: செல்வகுமார்

ad

ad